பொதுக்குழுவில் நடந்த அநாகரிக செயல்.. டிவி பார்த்த படியே மாரடைப்பால் உயிரிழந்த நிர்வாகி.. அதிர்ச்சியில் OPS
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நடந்த அநாகரிகச் செயல்களை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த பாலகிருஷ்ணனுக்கு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நடந்த அநாகரிகச் செயல்களை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த பாலகிருஷ்ணனுக்கு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் பிரளயமே உருவாகியுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் அரங்கத்திற்கு வருகை தந்த போது அவருக்கு எதிரான முழக்கங்கள், இபிஎஸ்க்கு ஆதரவான குரல்கள் எழுப்பப்பட்டது. அதேபோல், அவைத்தலைவர் தேர்வு மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அனுமதி இல்லாமல் ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என இபிஎஸ் தரப்பு அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் வெளிநடப்பு செய்த போது அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுதத்தியது.
இதையும் படிங்க;- வைத்திலிங்கத்தின் வலதுகரத்தை தட்டி தூக்கிய எடப்பாடியார்..அவரது கூடாரத்தை வெறித்தனமாக வேட்டையாடியதால் அதிர்ச்சி
ஜெயலலிதாவால் முதலமைச்சராக்கப்பட்ட ஓபிஎஸ்-யை திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நடந்த அநாகரிகச் செயல்களை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அதிமுக தொண்டன் உயிரிழந்த செய்ததி அதிர்ச்சி அளிக்கிறது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிக்கம்பட்டு ஊராட்சி, புதுபிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்த கழக மேலவை பிரதிநிதியும், எனது சோதனை காலங்களில் உடனிருந்தவரும், என்னுடைய தீவிர ஆதரவாளருமான அன்புச் சகோதரர் திரு.வி.பாலகிருஷ்ணன் அவர்கள், நேற்று முன்தினம் (23.6.2022) அஇஅதிமு கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நடந்த அநாகரிகச் செயல்களை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்த திரு.வி.பாலகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என ஓபிஎஸ் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க;- ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசியவர் இவர்தானா? சிக்கிய பரபரப்பு காட்சிகள்.!