ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசியவர் இவர்தானா? சிக்கிய பரபரப்பு காட்சிகள்.!

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த பாட்டிலை வீசியவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Is this the person who threw a bottle of water on the OPS? Trapped sensational scenes.!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மஹாலில் நேற்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, ஓபிஎஸ் மண்டபத்திற்கு வந்த போது மூத்த நிர்வாகிகள் யாரும் வரவேற்கவில்லை. இதனையடுத்து, கூட்டம் தொடங்கியது முதலே ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

இதையும் படிங்க;- நீதிபதிகள் தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் என்ன சொன்னார் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.!

Is this the person who threw a bottle of water on the OPS? Trapped sensational scenes.!

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தீர்மானங்களை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்மொழியுமாறு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி  பேசினார். அதன் பின்பு அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மேடையில் ஆவேசமாக கூறினார். பின்னர், தற்காலிக அவைத் தலைவராக இருந்த தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஸ் மேடையில் பேச முற்பட்டார். அப்போது அவருக்கு அவையில் பலத்த எதிர்ப்பு எழுந்துதது. 

Is this the person who threw a bottle of water on the OPS? Trapped sensational scenes.!

இதனையடுத்து, அவதை் தலைவர் தமிழ்மகன் உசேன் ஜூலை மாதம் 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றார். அப்போது ஒற்றை தலைமை தொடர்பாக முடிவெடுக்கப்படும். புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என கே.பி.முனுசாமி தெரிவித்தார். அப்போது துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் சட்ட விதிகளுக்கு முரண்பட்டு அதிமுக பொதுக்கழு கூட்டம் நடைபெறுவதாக மேடையிலேயே முழங்கினார். இதனையடுத்து,  கோபமடைந்த ஓபிஎஸ் கூட்டத்தில் இருந்து வெளியே செல்ல முயற்சித்த போது அவர் தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பாட்டிலை யார் வீசியது என்பது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அதில், அதிமுக நிர்வாகி முதியவர் ஒருவர் ஓபிஎஸ்ஐ குறி பார்த்து அடித்த பரபரப்பு காட்சி வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க;- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சால் பரபரப்பு..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios