மனு கொடுத்த பெண்ணை தலையில் தாக்கிய தமிழக அமைச்சர்...!பதவி விலக கெடு விதித்த அண்ணாமலை
மனு கொடுக்க வந்த பெண்ணை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தாக்கிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து 48 மணி நேரத்தில் அமைச்சர் பதவி வில வேண்டும் என அண்ணாமலை கெடு விதித்துள்ளார்.
திமுக- பாஜக மோதல்
திமுக - பாஜக இடையே தொடர் மோதல் ஏற்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து தமிழக அரசு மீது பாஜக தொடர் குற்றச்சாட்டுக்களை கூறிவருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் பயணத்தில் முறைகேடு, மின் வாரியத்தில் டெண்டர் வழங்கியதில் மோசடி, கர்ப்பினி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் டெண்டரில் மோசடி,ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தமிழக அரசு சலுகை என பல குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறது. இதன் காரணமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது திமுக 630 கோடி ரூபாய்க்கு நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்தநிலையில் திமுக அமைச்சர்களில் மூத்த அமைச்சராக உள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர்., நிகழ்ச்சி ஒன்றில் மனு கொடுக்க வந்த பெண்ணை தலையில் தாக்கிய நிகழ்வு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை ஏன் நீக்கவில்லை.? பதில் சொல்லுங்க பழனிச்சாமி.. ‘முரசொலி’ சுளீர் கேள்வி!
பெண்ணை தாக்கிய அமைச்சர்
வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இவர் தனது சொந்த மாவட்டமான விருதுநகருக்கு சென்ற இவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனி பிரமோற்ச விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தேரை வடம் பிடித்து இழுத்தார். இதனையடுத்து விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் இலவச ஆடு வழங்கும் திட்ட நிகழ்ச்சியில் வருவாய்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பங்கேற்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த கலாவதி என்ற பெண் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் மனு அளிக்க வந்தார். அந்த மனுவில் தனது குடும்பம் கஷ்டத்தில் உள்ளதாகவும் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும் என தெரிவித்து இருந்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த மனுவை வாங்கி பார்த்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அந்த மனுவால் அப்பெண்ணின் தலையில் அடித்தார்.
அமைச்சர் பதவி விலக வேண்டும்
இந்த காட்சி சமூக வலைதளத்தில் பரவியது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் கட்டணம் தெரிவித்து இருந்தனர். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மக்கள் என்ன உங்கள் அடிமைகளா? விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை தமிழக பாஜக முற்றுகையிடும் என எச்சரித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தி.மு.க., தரப்பில் விசாரித்த போது,மனு கொடுக்க வந்த பெண் அமைச்சருக்கு உறவினர் முறை என்பதால், அவரை செல்லமாக தட்டிப் பேசியதாக தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்
ஆடியோ அரசியல்.. இபிஎஸ் ஆதரவு தலைவர்களை நாரடித்த பொன்னையன்.. பொன்னையனுக்கும் அன்வர் ராஜா கதியா.?