அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனை சேர்க்க முடியாது... எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!!

அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனை சேர்க்க முடியாது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

ttv dhinakaran cannot be included in the admk alliance says edapadi palanisamy

அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனை சேர்க்க முடியாது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனை சேர்க்க முடியாது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும், தினகரன் 1 சதவீதம் கூட இடம்பெற வாய்ப்பு இல்லை.

இதையும் படிங்க: ஏழைகள் வைத்தியம் செய்வதை கூட இந்த விடியா அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.. வெளுத்து வாங்கும் இபிஎஸ்.!

சென்னைக்கு வரும் போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை நாங்கள் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. பாஜக ஒரு தேசியக் கட்சி, அதிமுக என்பது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி. மோடி, அமித்ஷா கட்சி வேறு, எங்கள் கட்சி வேறு. சென்னை வந்தபோது அமித்ஷா சந்திக்க நேரம் ஒதுக்க மறுத்துவிட்டதாக கூறுவது தவறான தகவல்.

இதையும் படிங்க: மூன்றரை லட்சம் காலிப்பணியிடம் நிரப்பப்படும்.? தேர்தல் வாக்குறுதியில் 10% கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை-ஓபிஎஸ்

அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமரோ, அமித்ஷாவோ வந்தால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் சந்திக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். முன்னதாக அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையத் தயார் என டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி டிடிவிக்கு அதிமுகவில் இடம் இல்லை என்று கூறியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios