காற்றில் பறக்கிறதா திமுக கட்டுப்பாடு? நேருவின் ஆதரவாளர்கள் என்பதால் இப்படி செய்வீங்களா? சிவா விசுவாசிகள் வேதனை
திருச்சி சிவா வீடு மீது தாக்குதல் நடத்தியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜியும், முத்து செல்வமும் கலந்து கொண்டது எப்படி என திருச்சி சிவா ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருச்சி சிவா- கேஎன் நேரு மோதல்
திருச்சியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அமைச்சர் நேரு கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் திமுக மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா அழைக்கப்படவில்லையென்றும், அவரது பெயர் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் இடம்பெறவில்லையென புகார் கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திருச்சி சிவா ஆதரவாளர்கள் அமைச்சர் நேருவிற்கு கருப்பு கொடி காட்ட திட்டமிட்டனர். இதனால் அமைச்சர் நேரு மற்றும் திருச்சி சிவா ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. திருச்சி சிவா வீட்டின் மீதும் திமுக நிர்வாகிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் திமுகவில் இருந்தும் இடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. அமைச்சர் நேருவும், திருச்சி சிவா வீட்டிற்கு நேரில் சென்று வருத்தம் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது... அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த அமித்ஷா
கட்சி கட்டுப்பாட்டை மீறிய திருச்சி திமுக.?
இந்தநிலையில் திமுக எம்பி-யான திருச்சி சிவா வீட்டின் மீது தாக்குதல் நடத்திய 5 பேருடனும் திமுகவினர் யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என திமுக தலைமை உத்தரவிட்டது. ஆனால், திமுகவின் உத்தரவிற்கு மாறாக கடந்த 27 ஆம் தேதி இந்த வழக்கில் இருந்து 5 பேருக்கும் ஜாமின் கிடைத்த நிலையில், அவர்களை நேருவின் ஆதரவாளர் ஒருவர் சிறை வாசலுக்கே சென்று தனது காரில் அழைத்து வந்துள்ளார். மேலும் திருச்சி மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று முன் தினம் (28 மார்ச்) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட விஜியும், முத்து செல்வமும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் திருச்சி சிவா அணியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். கட்சியை விட்டு நீக்கியவர்களை எப்படி திமுக ஆலோசனை கூட்டத்திற்கு அழைக்கலாம் என கேள்வி எழுப்பியுள்ளனர். திமுக தலைமை உத்தரவை திருச்சி மாவட்டத்திற்கு விதி விலக்கா என எனவும் ஆதங்கப்படுகின்றனர்.
இதையும் படியுங்கள்
தொப்பி, கண்ணாடி போட்டால் நீங்கள் எம்.ஜி.ஆரா? இபிஎஸ்-ஐ விமர்சித்த வி.பி. துரைசாமி..!