தொப்பி, கண்ணாடி போட்டால் நீங்கள் எம்.ஜி.ஆரா? இபிஎஸ்-ஐ விமர்சித்த வி.பி. துரைசாமி..!

 ராகுல் காந்தி தகுதிநீக்க விவகாரத்தை பத்திரிகையாளர்கள் சரியாக எடுத்து செல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை திருடர்கள் என்று சொன்னதால் தான் சூரத் நீதிமன்றம் அவருக்கு தண்டனை விதித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியே அவருக்கு பதவி பறிக்கப்பட்டுள்ளது.

VP Duraisamy criticized Edappadi Palanisamy

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நல்லாட்சி காரணமாக நிச்சயமாக வெற்றி பெறுவோம் என வி.பி.துரைசாமி கூறியுள்ளார். 

சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும். கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நல்லாட்சி காரணமாக நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்றார். 

இதையும் படிங்க;- தலையில் தொப்பி, கூலிங் கிளாஸ்.. எம்ஜிஆர் ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி.. வைரல் போட்டோஸ்..!

VP Duraisamy criticized Edappadi Palanisamy

மேலும், ராகுல் காந்தி தகுதிநீக்க விவகாரத்தை பத்திரிகையாளர்கள் சரியாக எடுத்து செல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை திருடர்கள் என்று சொன்னதால் தான் சூரத் நீதிமன்றம் அவருக்கு தண்டனை விதித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியே அவருக்கு பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;-  AIADMK : புது ரூட்டில் திரும்பிய ஓபிஎஸ்.. நிம்மதியா விடமாட்டாங்க போலயே - புலம்பும் எடப்பாடி பழனிசாமி

VP Duraisamy criticized Edappadi Palanisamy

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் என்னுடைய அரசியல் அனுபவத்தில் சொல்கிறேன், கருப்பு எம்ஜிஆர், சிகப்பு எம்ஜிஆர் என வந்துள்ளார்கள். நேற்றைக்கு ஒரு எம்ஜிஆர் வந்துள்ளார். இப்படி பல எம்ஜிஆர்களை பார்த்து உள்ளோம். தொப்பி, கூலிங் கிளாஸ் போட்டால் எம்ஜிஆர் என்றால் நீங்கள் கூட முயற்சி செய்யலாம். ஒரே ஒரு எம்ஜிஆரைத்தான் நாங்கள் பார்த்துள்ளோம் என இபிஎஸ்ஐ விமர்சித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios