ஜூன் 23ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் மறக்க முடியாத நாள்? என்ன காரணம் தெரியுமா? பிளாஸ்பேக்

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தப்பின், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க அடித்தளமிட்ட தினம் இன்று. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றாலும், பொதுக்குழு மற்றும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு இன்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

Today is the day when the problem of single leadership in AIADMK started against OPS

அதிமுகவின் அதிகார மோதல்

அதிமுகவின் ஆணி வேராக இருந்த ஜெயலலிதா மறைந்து 6 ஆண்டு பிறகும் அதிமுக நிர்வாகிகளுக்குள்  ஏற்பட்ட குழப்பம் இன்னும் முடிவடையவில்லை.. நீயா.. நானா என்ற போட்டியானது இன்னும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.  ஓபிஎஸ்ம் இபிஎஸ்ம் இரட்டை குழல் ஒற்றை துப்பாக்கியாக இருந்து வந்த நிலையில் யார் கண்  பட்டதோ தெரியவில்லை, இருவருக்கும் மீண்டும் அதிகார போட்டி தலை தூக்க ஆரம்பித்தது. அதற்கு ஆரம்பம் தான் ஜூன் 23ஆம் தேதி, கடந்த  ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுக்குழு தீர்மானங்களை இறுதி செய்ய அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் ஜூன் 14 ஆம் தேதி நடைப்பெற்றது.

இபிஎஸ் கோட்டையில் கெத்து காட்ட திட்டமிடும் ஓபிஎஸ்.!டிடிவியோடு இணைந்து அடுத்த கட்ட திட்டத்திற்கு தயாரான பிளான்?

Today is the day when the problem of single leadership in AIADMK started against OPS

தொடங்கிய அதிகார மோதல்

அந்த கூட்டத்தில் கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற  எடப்பாடியின் ஆதரவாளர்களின் முழக்கம் எழ, அன்றைய தினம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பனிப்போர் துவங்கியது. அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மூத்த நிர்வாகிகள் என பலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். முன்னாஜ் அமைச்சர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.டி.ராமச்சந்திரன் உள்ளிட்ட சிலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நின்றனர்.

Today is the day when the problem of single leadership in AIADMK started against OPS

பொதுக்குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ்

விடிய, விடிய நடத்த வழக்கு வாதம்

மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே அதிகம் இருந்ததால், பொதுக்குழுவை கூட்ட வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கும் கடிதம் எழுதினார். ஆனால், அந்த கடிதம் தங்களுக்கு கிடைக்கவில்லை என இபிஎஸ் தரப்பு தெரிவித்தது. இதற்கிடையே  பொதுக்குழு தொடர்பாக இபிஎஸ் அணிக்கு ஆதரவாக வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவை நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர்மோகன் அமர்வு ஜூன் 22 ஆம் தேதி சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமி வீட்டில் இரவு முழுவதும் விசாரித்து அதிகாலையில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Today is the day when the problem of single leadership in AIADMK started against OPS

ஓபிஎஸ்க்கு எதிராக பொதுக்குழுவில் முழக்கம்

அதில்,அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி அளித்த நீதிபதிகள், 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என உத்தரவிட்டனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிருப்தி அடைந்தது. ஜூன் 23ஆம் தேதி அ.தி.மு.கவின் பொதுக் குழு நடந்த அரங்கில் பெரும்பான்மையான பொதுக் குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம்தான் இருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இதனால் பொதுக்குழுவுக்கு வந்த ஓ.பி.எஸ்யை கடுமையாக விமர்சித்தும்,  எடப்பாடி பழனிசாமியைப் போற்றியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பொதுக்குழு கூடிய சில நிமிடங்களில் ஆக்ரோஷமாக எழுந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ஓபிஎஸ் கொண்டு வந்த பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தையும் நிராகரிப்பதாக தெரிவித்தார்.

Today is the day when the problem of single leadership in AIADMK started against OPS

ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு

இதனால் ஓபிஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அண்ணன் தம்பி சண்டை பேசி முடிக்கலாம் என்று திட்டமிட்டவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. அதை தொடர்ந்து அவைத்தலைவராக தமிழ் மகன் ஹுசேன் பெயரை எடப்பபாடி பழனிசாமி முன்மொழிய பொதுக்குழுவால் அவைத்தலைவராக தமிழ் மகன் ஹுசேன் தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு மீண்டும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  அதை தொடர்ந்து பொதுக்குழு மேடையில் இருந்து ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும் வகையில் இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என பகிரங்கமாக கூறி வெளியேறினர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் அதிமுக ஒருங்கிணைப்பாளராக அதுவரை இருந்த ஓ.பி.எஸ் மீது பாட்டில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Today is the day when the problem of single leadership in AIADMK started against OPS

அதிமுக அலுவலகத்திற்கு சீல்

அதை தொடர்ந்து ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடி கட்சியின் சட்ட விதிகளில் மாற்றம் செய்தது. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்து பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கலவரமே நடந்தது. தனது ஆதரவாளர்களோடு அதிமுக அலுவலகம் சென்றவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கல்வீச்சு, உருட்டை கட்டை  தாக்குதல் என அவ்வை சண்முகம் சாலையே போர்க்களமாக மாறியது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த இபிஎஸ் தரப்பு பொதுக்குழுவிலேயே ஓ.பன்னீர் செல்வத்தை மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

Today is the day when the problem of single leadership in AIADMK started against OPS

தொடரும் வழக்கு- முடிவு எப்போது.?

ஜூலை 11 ஆம் தேதி நடைப்பெற்ற பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதை தொடர்ந்து உச்ச நிதிமன்றம் என தொடர்ந்து சட்ட போராட்டம் நடைபெற்ற நிலையில் இபிஎஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 28 ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். இருந்த போதும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்த நிலையில், அதனை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு இன்றும் விசாரணையில் உள்ளது.

மேல்முறையீட்டு வழக்கு ஒரு புறமிருக்க டிடிவி தினகரனுடன் கைக்கோர்த்துள்ள ஓ.பி.எஸ் அவருடன் இணைந்து கட்சியை மீட்பேன் என தெரிவித்துள்ளார். ஓ.பி.எஸ் டிடிவி திட்டம் பலிக்குமா? இதனை எடப்பாடி பழனிசாமி எவ்வாறு எதிர்கொள்ள போகிறார் என்பதெல்லாம் வரும் நாட்களில் தான் தெரிய வரும்.

இதையும் படியுங்கள்

2 ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ஊழல்! சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு போச்சு! ஆளுங்கட்சியை அலறவிடும் இபிஎஸ்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios