Asianet News TamilAsianet News Tamil

முதல்வர் சொல்லிட்டாரு.. 18 மாதம் போதும், மதுரையை மாற்றிக்காட்டுகிறேன்.. பிடிஆர் பேச்சு !

‘அரசால் செய்ய முடியாத தொழில் வளர்ச்சியை தொழில் முனைவோர்களால் தான் செய்ய முடியும்’ என்று கூறியுள்ளார்  நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

Tn finance minister ptr palainvel thiagarajan speech about madurai develop scheme
Author
First Published Sep 3, 2022, 11:05 PM IST

மதுரை தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் சங்கம் நடத்திய நிகழ்ச்சி இன்று  நடைபெற்றது. இதில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 'தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்வது மட்டும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. 

Tn finance minister ptr palainvel thiagarajan speech about madurai develop scheme

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

அரசால் செய்ய முடியாத தொழில் வளர்ச்சியை தொழில் முனைவோர்களால் தான் செய்ய முடியும். சுயநலத்துக்காக கொள்கை, இலக்கு என பல காரணத்திற்காக பலர் அரசியலுக்கு வருகின்றனர். ஆனால், சமூக நீதியை நிலை நாட்டும் வகையில் அனைவருக்கும் சமமான பங்களிப்பு கிடைக்கும் வகையில் அரசு இயங்க வேண்டும் என்ற கொள்கையோடு அரசியலுக்கு வந்தவன் நான்.

பண ஒதுக்கீடு, திட்டங்கள் என அனைத்திலும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பயன் அடைய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தனியார் நிறுவனங்கள் பல்வேறு சுய கட்டுப்பாட்டுடன் தங்களது ஊழியர்களை நடத்த முடியும். ஆனால், அரசு அவ்வாறு நடந்து கொள்ள முடியாது. அரசால் செய்ய முடியாத தொழில் வளர்ச்சியை தொழில் முனைவோரால் செய்ய முடியும். மேலும், குஜராத் உள்ளிட்ட எந்த மாடலாக இருந்தாலும் கல்வி வழங்கவில்லை என்றால் வளர்ச்சி இருக்காது. 

மேலும் செய்திகளுக்கு..அண்ணாமலைக்கு பயந்து அரசியலை விட்டு வெளியேறும் பிடிஆர்.. கொண்டாட்டத்தில் பாஜக - உண்மையா?

Tn finance minister ptr palainvel thiagarajan speech about madurai develop scheme

தமிழகம் கல்வி வழங்குவதில் மற்ற மாநிலங்களைவிட முன்னோடியாக உள்ளது. அமெரிக்க உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பாக மதுரையில் முதலீடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். கடந்த ஏழு ஆண்டுகளில் பொருளாதார சரிவில் இருந்த தமிழகம் மீண்டு வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கிறது. 18 முதல் 24 மாதங்களில் மதுரையின் முகமே மாறும். மதுரையில் முக்கியமான முதலீட்டு திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..திமுகவுடன் கைகோர்க்கும் மக்கள் நீதி மய்யம்.. ஆளுநர் ஆர்.என் ரவிக்கு முட்டுக்கட்டை போட்ட கமல் !

Follow Us:
Download App:
  • android
  • ios