திமுக அரசின் ஆட்சியில், தமிழ்நாடு போதைப்பொருள் கடத்தல் மன்னன்கள் மற்றும் தீவிரவாதிகளின் பாதுகாப்பான சொர்க்கபுரியாக இருந்து வருகிறது. - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

கோவை தற்கொலைப்படைத் தாக்குதல் குறித்தும், இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் மன்னன் முகமது இம்ரான் இந்தியாவுக்குள் நுழைவது குறித்தும், மத்திய உளவுத்துறை தனிப்பட்ட முறையில் முன்கூட்டிய தகவல் அனுப்பியும், தமிழ்நாடு அரசின் உளவுத்துறை எதுவுமே செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டி உள்ளார் அண்ணாமலை.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், திமுக அரசின் ஆட்சியில், தமிழ்நாடு போதைப்பொருள் கடத்தல் மன்னன்கள் மற்றும் தீவிரவாதிகளின் பாதுகாப்பான சொர்க்கபுரியாக இருந்து வருகிறது. தமிழக காவல்துறை மற்றும் உளவுத்துறை துரதிர்ஷ்டவசமாக தங்களது கடமைகளை மறந்து, கோபாலபுர குடும்பத்தின் அரசியல் எதிரிகளை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க..Video : சுமார் 360 அடி உயரம்; உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியின் விளிம்பில் நின்ற பெண் - பதறவைக்கும் வீடியோ

கோவை தற்கொலைப்படைத் தாக்குதல் குறித்தும், இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் மன்னன் முகமது இம்ரான் இந்தியாவுக்குள் நுழைவது குறித்தும், மத்திய உளவுத்துறை தனிப்பட்ட முறையில் முன்கூட்டிய தகவல் அனுப்பியும், தமிழ்நாடு அரசின் உளவுத்துறை எதுவுமே செய்யவில்லை.

இலங்கையில் இருந்து பிணையில் வெளிவந்த முகமது இம்ரான், கிறிஸ்துமஸ் தினத்திலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்தது பதுங்கியிருப்பது, குறித்த மத்திய உளவுத்துறை தமிழ்நாடு உளவுத்துறைக்கு அனுப்பியிருந்த அந்த குறிப்பிட்ட எச்சரிக்கை குறித்து தனியார் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. கடந்த காலங்களில் நடவடிக்கைகள் எடுக்கத் தவறியதுபோலவே, தமிழக முதல்வர் இந்த விவகாரத்திலும் தடுமாறியுள்ளார்.

இதையும் படிங்க..Swiggy : புத்தாண்டில் காண்டம் விற்பனை அமோகம்.. நம்பர் 1 இடத்தை பிடித்த பிரியாணி - ஸ்விக்கி சூப்பர் தகவல்

Scroll to load tweet…

துரதிர்ஷ்டவசமாக, இந்த தகுதியற்ற திமுக அரசாங்கத்தை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்துவிட்டனர். இதனால், நிர்வாகத் திறமையற்ற திமுக அரசின் பேரழிவுகள் தொடர்கிறது என்று தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார் அண்ணாமலை.

இதையும் படிங்க..ஹே ராம் முதல் மொழி திணிப்பு வரை.. கடைசியில் கமல் ஹாசனுக்கு ராகுல் கொடுத்த சர்ப்ரைஸ் - என்ன தெரியுமா?