நான் வேட்பாளராக ஒப்புக்கொண்டதற்கு இது தான் காரணம்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் சொன்ன பரபரப்பு தகவல்..!
தேர்தல் பணப்பட்டுவாடா குறித்து தானும் அமைச்சர் நேருவும் பேசியதைப் போல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வீடியோ பொய்யானது.
பல்வேறு அரசியல் சூழல்களில் தாம் பேசிய தனது முந்தைய பேச்சுக்கள் சிலவற்றை வெட்டியும், ஒட்டியும் சிலர் திரித்து வெளியிட்டு வருகின்றனர் என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட 3 மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையும் படிங்க;- 100 ஆண்டு கால கோயிலை இடித்ததாக பேசினாரா டி.ஆர்.பாலு.? அண்ணாமலையின் வீடியோவிற்க்கு பதிலடி கொடுக்கும் திமுக
இதனையடுத்து, கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்றே காங்கிரஸ் கட்சிக்கே இந்த முறையும் திமுக ஒதுக்கியது. வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன்;- தனது மகன் விட்டுச் சென்ற பணிகளை தொடர விரும்புகிறேன். அதன் காரணமாகவே ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவித்தார். குறிப்பாக நான் வேட்பாளராக ஒப்புக்கொண்டதன் காரணம் நான் பிறந்த ஈரோட்டிற்கு நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்பதால் தான். மேலும், தனது தாத்தா பெரியார் ஈரோடு நகராட்சி தலைவராகவும், தனது அப்பா சம்பத் நாடாளுமன்ற உறுப்பினராகவும், தனது மகன் திருமகன் ஈவெரா சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து ஈரோட்டின் வளர்ச்சிக்கு எண்ணற்ற பணிகளை செய்திருக்கின்றனர். இவர்கள் விட்டுச் சென்ற பணிகளை நிச்சயம் தாம் தொடர்வேன் என்றார்.
இதையும் படிங்க;- தேமுதிக வேட்பாளரை திரும்ப பெற்று அதிமுகவுக்கு ஆதரவா? எல்.கே.சுதீஷ் சொன்ன பரபரப்பு விளக்கம்..!
தேர்தல் பணப்பட்டுவாடா குறித்து தானும் அமைச்சர் நேருவும் பேசியதைப் போல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வீடியோ பொய்யானது. பல்வேறு அரசியல் சூழல்களில் தாம் பேசிய தனது முந்தைய பேச்சுக்கள் சிலவற்றை வெட்டியும், ஒட்டியும் சிலர் திரித்து வெளியிட்டு வருவதாகவும் அதை தாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சீமான் மிக நல்ல நண்பர். ஆனால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கொள்கைகளை சொல்கிறார். ஆரம்பக்காலத்தில் பெரியாரை புகழ்ந்தார். இப்பொழுது கடுமையாக விமர்சனம் செய்கிறார் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.