ஓ.பன்னீர்செல்வத்தின் இறுதி அஸ்திரம் இதுதானா? விழுவாரா? திமிரு எழுவாரா? எடப்பாடியார்..!
கடந்த முறை முதல்வர்இ எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுத்தது போல இந்த விட்டுக்கொடுக்க கூடாது என்ற முடிவில் ஓபிஎஸ் இருந்து வருகிறார். ஆகையால், இபிஎஸ் ஆதரவாளர்களின் சமரச முயற்சிக்கு ஓபிஎஸ் உடன்படவில்லை.
அதிமுகவின் ஒற்றை தலைமையை சசிகலாவை கொண்டுவர வேண்டுமென ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் சிறப்பு தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் எதிர்பாராத வகையில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்களுடைய ஆதரவாளர்கள், ஆதரவு நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் தனித்தனியாக இருவரும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். கடந்த முறை முதல்வர்இ எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுத்தது போல இந்த விட்டுக்கொடுக்க கூடாது என்ற முடிவில் ஓபிஎஸ் இருந்து வருகிறார். ஆகையால், இபிஎஸ் ஆதரவாளர்களின் சமரச முயற்சிக்கு ஓபிஎஸ் உடன்படவில்லை.
இதையும் படிங்க;- ''ஐயோ என்னை தனியா விட்டுட்டு போயிட்டியே".. நெஞ்சில் அடித்து கதறிய மனைவி..திருமணமான 7 நாளில் புதுமாப்பிள்ளை பலி
ஒற்றைத் தலைமை கூடாது என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருப்பது போல, இரட்டைத் தலைமை கூடாது என்பதில் இபிஎஸ் தீவிரமாக இருக்கிறார். இதனால், இரு தரப்பும் மாறி மாறி விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இதனையடுத்து பொதுக்குழுவை நடத்த விடக் கூடாது என்ற முயற்சியில் ஓபிஎஸ் தரப்பு இறங்கியுள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடுவார்கள் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று இபிஎஸ்ஸுக்கு எழுதிய கடிதத்தை ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதே காரணத்தை முன்வைத்தும் பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்றும் ஆவடி காவல் நிலையத்திலும் ஓபிஎஸ் தரப்பு மனு அளித்துள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தில் நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று ஓபிஎஸ் தரப்பினர் முறையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா சென்னை வந்து இருக்கிறார். சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய பிறகு தனது அண்ணன் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தாக கூறப்படுகிறது. அப்போது சசிகலா கூறிய சில முக்கிய தகவல்களை ஓபிஎஸ்ஸிடம் கூறியிருக்கிறார்.
இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நீடித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, தேவைப்பட்டால் சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுக்கலாம் என ஓபிஎஸ் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் அவரிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து அஸ்திரங்களும் தோல்வி அடையும் பட்சத்தில் சசிகலா என்ற ஆயுதத்தை பயன்படுத்த ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டார தகவல் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க;- அதிமுக பொதுக்குழுக்கு பாதுகாப்பு.. போலீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!