முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் முகம்மது நபி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்கள் பதிவிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி நாகர்கோவில் கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டிருந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சமூக வலைத்தளங்களில் முதலமைச்சர் குறித்த அவதூறு கருத்துக்களை பதிவிட்டிருந்தது திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி கீறகழுர் பகுதியைச் சேர்ந்த அருள் முருக கிருஷ்ணன் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் திருவாரூர் விரைந்து சென்று அருள்முருக கிருஷ்ணனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அருள் முருக கிருஷ்ணனை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட அருள்முருக கிருஷ்ணனை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

இதையும் படிங்க : 2022ல் 7 புயல்கள் தமிழகத்தை தாக்கும்..சென்னை வெள்ளத்தில் மிதக்கும் - திகில் கிளப்பும் ராமேஸ்வரம் பஞ்சாங்கம் !