2022ல் 7 புயல்கள் தமிழகத்தை தாக்கும்..சென்னை வெள்ளத்தில் மிதக்கும் - திகில் கிளப்பும் ராமேஸ்வரம் பஞ்சாங்கம் !
வரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை 19 புயல் சின்னங்கள் உருவாகி 12 பலவீனமாகி 7 அதிதீவிர புயலாக வீசும். இதனால் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், நாகையில் பல கடலோர பகுதியில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
நேற்று தமிழ்ப் புத்தாண்டு விழாவையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் குருக்கள் உதயகுமார் ஆற்காடு சீதாராமய்யர் எழுதிய பஞ்சாங்கத்தை வாசித்தார்.இதில், 'வரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை 19 புயல் சின்னங்கள் உருவாகி 12 பலவீனமாகி 7 அதிதீவிர புயலாக வீசும். இதனால் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், நாகையில் பல கடலோர பகுதியில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
இதனால் விவசாயம் பாதித்தாலும் தென்னை, மா, பலா, வாழை விளைச்சல் நன்றாக இருக்கும். பெட்ரோல், டீசல் விலை மேலும் உச்சத்தை தொடும். கோயில் நகைகளை அரசு உருக்கி கருவூலத்தில் பாதுகாக்க வேண்டிய சூழல் உருவாகும்.சில அரசியல் தலைவர்கள் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தை புதிய தொழிலில் முதலீடு செய்து பெரும் நஷ்டத்தை சந்திப்பார்கள்.மக்கள் வருவாய் வளர்ச்சிக்கு மேலும் இரண்டு அல்லது மூன்று மாநிலங்கள் உருவாகக்கூடும்.
நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கண்டு சீனா, பாகிஸ்தான் பொறாமையில் பல சூழ்ச்சிகள் செய்யும். பின் அது பயனின்றி போகும். எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கும். வெட்டுக்கிளிகளால் கோதுமை பயிர் சேதமாகும். மின்காந்த அலைகளால் அலைபேசி டவர் சேதமாகும். இந்தியா கடல் வழியாக செல்லும் ஒரு வெளிநாடு சரக்கு கப்பல் நள்ளிரவில் தீக்கிரையாகும் அபாயம் உள்ளது. புதிய வைரஸ் பரவி மக்கள் காய்ச்சலில் பாதிக்கப்படுவர்’ என தெரிவித்தார். இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.