கள்ளக்காதலனுடன் இரவில் பேச்சு..குஷியில் மனைவி..கடுப்பான கணவன் செய்த விபரீத சம்பவம்..!

மனைவி சசிகலா வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக கணவர் ஜெயக்குமார் ஒரு பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைத்து உள்ளார். அப்போது மனைவி சசிகலா செல்போனில் அதிக நேரம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

Husband who killed wife who talked to fake boyfriend midnight at salem

சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி சசிகலா(வயது 37). இவர் கடந்த 13ம் தேதி குடும்ப தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து மனைவி சசிகலாவின் உடலை போலீசாருக்கு தெரியாமல் அடக்கம் செய்ய கணவன் ஜெயக்குமார் மற்றும் உறவினர்கள் முடிவு செய்து உள்ளனர்.

Husband who killed wife who talked to fake boyfriend midnight at salem

தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கணவன் ஜெயக்குமாரிடம் போலீசார நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், விநாயகபுரத்தை சேர்ந்த சசிகலா என்பவரின் தற்கொலை தொடர்பாக கணவர் ஜெயக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் மனைவி சசிகலா வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக கணவர் ஜெயக்குமார் ஒரு பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைத்து உள்ளார். அப்போது மனைவி சசிகலா செல்போனில் அதிக நேரம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை ஜெயக்குமார் கண்டித்து உள்ளார். இதை மனைவி சசிகலா கேட்காத காரணத்தால் கடந்த13-ம் தேதி மீண்டும் கணவர் ஜெயக்குமார் கண்டித்து உள்ளார். அப்போது கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில ஆத்திரம் அடைந்த கணவன் ஜெயக்குமார் கயிற்றால் மனைவி சசிகலா கழுத்தை இறுக்கி கொலை செய்து உள்ளார்.

Husband who killed wife who talked to fake boyfriend midnight at salem

பின்னர் தனது பெரியப்பா செல்வராஜின் உதவியுடன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போன்று ஜெயக்குமார் நாடகம் நடத்தி உள்ளார். இதனை அடுத்து மனைவி சசிகலாவின் உடலை போலீசாருக்கு தெரியால் அடக்கம் செய்ய கணவர் ஜெயக்குமா முயன்றது போலீசார் விசாரணையில் தெரியவந்து உள்ளது.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத நண்பருக்கு ‘தர்ம அடி’ கொடுத்த நண்பர்கள்.. வேற மாதிரி சம்பவம் !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios