டிஆர்பி ராஜாவிற்கு அமைச்சர் பதவி வழங்குவதா..? திருவாரூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு- ஏன் தெரியுமா.?

டிஆர்பி ராஜாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திருவாரூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணனின் ஆதரவாளர்கள் போர்கொடி தூக்கியுள்ளனர்.

Thiruvarur district DMK has protested against the ministerial post given to TRB Raja

அமைச்சரவையில் மாற்றம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது. அப்போது பல்வேறு மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த தேர்தலில் கொங்கு மண்டலம் திமுகவிற்கு கை கொடுக்காத நிலையிலும் அந்த மாவட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செந்தில்பாலாஜி, முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் அமைச்சராக நியமிக்கப்பட்டனர்.திமுகவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டெல்டா மாவட்டத்தில் ஒரு அமைச்சர்களும் நியமிக்கப்படாதது அப்பகுதியை சேர்ந்த நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்தது. தங்கள் மாவட்டத்தில் மூத்த நிர்வாகியாக இருக்கும் பூண்டி கலைவாணனுக்கு வாய்ப்பு கிடைக்கும் எதிர்பார்த்தனர்.

Thiruvarur district DMK has protested against the ministerial post given to TRB Raja

டிஆர்பி ராஜா அமைச்சராக நியமனம்

அதிருப்தியில் உள்ள திமுகவினரை சரிசெய்யும் வகையில் ஏகேஎஸ் விஜயனை டெல்லி மேலிட பொறுப்பாளராக திமுக தலைமை நியமித்தது,தற்போது திமுகவின் இரண்டு ஆண்டுகால ஆட்சி முடிவடைந்து 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் நீக்கப்பட்டு டெல்லா மாவட்டத்தை சேர்ந்த டிஆர்பி ராஜாவிற்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. 3 முறை சட்டமன்ற உறுப்பினாரக இருந்த டிஆர்பி ராஜாவிற்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதை அப்பகுதியை பலரும் வரவேற்றுள்ள நிலையில், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள பூண்டி கலைவாணனின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

Thiruvarur district DMK has protested against the ministerial post given to TRB Raja

திருவாரூர் மாவட்ட திமுக எதிர்ப்பு

கட்சிக்காக பாடுபட்ட மாவட்ட செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான கலைவாணனுக்கு அமைச்சர் பதவி வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பூண்டி கலைவாணன் ஆதரவாளர்கள் சமூகவலைதளத்தில்,  கழகத்திற்காக நாங்கள் இல்லை,  கலைவாணனுக்காகத்தான் திமுகவில் இருக்கிறோம், கழகம் வேண்டாம்,  கலைவாணன் போதும் என்று பதிவிட்டு வருகிறார்கள். மேலும் பூண்டி கலைவாணனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வலியுறுத்தி போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

2 ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான நாட்கள்.! நம்பர் 1 துறையான ஐடி துறையை வழங்கியதற்கு நன்றி..! பிடிஆர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios