பாஜக எதிர்ப்பு தலைவர்களை ஒன்றினைக்க வேண்டிய நேரம் இது.! பிரதமர் பதவி பற்றி பின்னர் பேசிக்கலாம்- திருமாவளவன்
நாடாளுமன்றத் தேர்தலில் சனாதன சக்திகளை எதிர்த்துப் போராடும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள அனைத்து பாஜக எதிர்ப்புத் தலைவர்களையும் சந்திக்க வேண்டிய நேரம் இது. என தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தற்போது பிரதமர் பதவி குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமில்லையென தெரிவித்துள்ளார்.
இரண்டு முறை தொடர் வெற்றி பெற்ற பாஜக
மோடி தலைமையிலான பாஜக கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. இதனையடுத்த பாஜக அரசு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையால் மீண்டும் 2019 ஆம் ஆண்டும் தொடர் வெற்றியை பெற்றது. இதனையடுத்து ஹாட்ரிக் வெற்றியை பெற பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை அனைத்து மாநிலங்களிலும் துரிதப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் பாஜகவிற்கு எதிரான அணியை ஒன்றிணைக்க எதிர்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்காக பல்வேறு கட்ட ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல முறை எதிர்கட்சி தலைவர்கள் கூடி பேசியும் உள்ளனர். ஆனால் யார் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது, பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வியின் காரணமாக அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் எதிர்கட்சிகள் பிரிந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது.
சென்னையில் தேசிய தலைவர்கள்
இந்தநிலையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பரூக்அப்துல்லா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக அணைவரும் ஒன்றினைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்தநிலையில் இது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,
ஒன்றிணைய வேண்டிய நேரம் இது
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சனாதன சக்திகளை எதிர்த்துப் போராடும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள அனைத்து பாஜக எதிர்ப்புத் தலைவர்களையும் சந்திக்க வேண்டிய நேரம் இது என தெரிவித்துள்ளார். தேசத்திற்கு ஆபத்தான சூழ்நிலைகள் உருவாகும் இந்த நேரத்தில் பிரதமர் பதவி குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தேசிய தலைவர்களை சந்திக்க வேண்டும்
எனவே, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவதற்கு ஒத்த எண்ணம் கொண்ட தலைவர்களை ஒன்றினைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நித்திஷ்குமார், மம்தா பானர்ஜி, சந்திர சேகர் ராவ், அரவிந்த் கெஜ்ரிவால், உத்தவ் தாக்ரே, பிரணாயி விஜயன், ஜெகன் மோகன் ஆகியோரை சந்திக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்