Asianet News TamilAsianet News Tamil

சனாதன சக்திகளை எதிர்க்க நடை பயணம் அவசியம்! கம்யூனிஸ்ட்,திராவிட கட்சிகள் ராகுலுக்கு வலு சேர்க்க வேண்டும்-திருமா

மாவோவுக்கு பிறகு அதிகதூரம் நடை பயணத்தை மேற்கொண்ட தலைவர் ராகுல் காந்தி. சனாதன சக்திகளை எதிர்க்க, அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க ராகுல்காந்தியின் பயணம் அவசியாமான ஒன்று என தெரிவித்தார். எனவே திராவிட கட்சிகளும், கம்யூனிஸ்ட்களும் ராகுல் காந்திக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Thirumavalavan requested that the Communist and Dravidian parties should strengthen Rahul
Author
First Published Dec 26, 2022, 8:59 AM IST

காந்தி- நேரு முரண்பாடு

தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவரும், ஊடகத் துறைத் தலைவருமான ஆ.கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு - அரிய புகைப்பட வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. கோபண்ணாவின் பேத்தி ஆதியா, முதல்வரிடம் நூலைக் கொடுத்தார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட, இந்து என்.ராம் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்த நூலை முதல்வர் வெளியிட்டது இதற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. இந்த நூலில் பல்வேறு வரலாற்று களஞ்சியம் இருக்கிறது. ஜவஹர்லால் நேரு ஒரு குடியரசுவாதி. நேரு முற்போக்கு சிந்தனை வாதி. ஏழை எளியவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த செயலாற்றினார். ஜவஹர்லால் நேரு காந்தி உடன் கருத்து முரண்பாடு கொண்டவர் என்றாலும் அவருடன் இணைந்து செயல்பட்டார்.

அரசின் அறிவிப்பால் விவசாயிகளும், தொழிலாளர்களும் ஏமாற்றம்.! ஸ்டாலினுக்கு அவரச கடிதம் எழுதிய கே.பாலகிருஷ்ணன்

Thirumavalavan requested that the Communist and Dravidian parties should strengthen Rahul

ராகுலுக்கு ஒத்துழைப்பு வழங்கிடுக

இஸ்லாமியர்கள் கொண்டாட வேண்டிய ஒரு தலைவர் மகாத்மா காந்தி. இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் இணைந்து செயல்பட பாடுபட்டவர் மகாத்மா காந்தி ராகுல் 108 நாட்கள் தனது நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். நேரு கொள்ளு பேரன் ராகுல் காந்தி இன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கட்சி தலைவர் பதவிக்கு ஆசைப்படாமல் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த ராகுல் காந்தி பாதயாத்திரை இன்று வெற்றிகரமாக சென்று வருகிறது. மாவோவுக்கு பிறகு அதிகதூரம் நடை பயணத்தை மேற்கொண்ட தலைவர் ராகுல் காந்தி. சனாதன சக்திகளை எதிர்க்க, அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க ராகுல்காந்தியின் பயணம் அவசியாமான ஒன்று என தெரிவித்தார். எனவே திராவிட கட்சிகளும், கம்யூனிஸ்ட்களும் ராகுல் காந்திக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

காலியாகும் டிடிவி.தினகரன் கூடாராம்.. முக்கிய மாவட்ட செயலாளர்களை தட்டித்தூக்கிய சி.வி.சண்முகம்..!

Thirumavalavan requested that the Communist and Dravidian parties should strengthen Rahul

மோடியை எதிர்ப்பவர் ஸ்டாலின்

இதனை தொடர்ந்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மதத்தை விட மொழி சக்தி வாய்ந்ததாக உள்ளது.அதனால் தான் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது, காஷ்மிரில் நேரு செய்ததை விடவா மோடி செய்து விட முடியும். ஆகையால் அவர் ஆற்றிய ஒவ்வொரு விஷயமும் அற்புதமானது. ஸ்டாலின் அவர்கள் தேர்தலுக்கு முன் தி மு க தலைவராக இருந்தார். தேர்தலுக்கு பின் மக்களின் தலைவராக இருக்கிறார். அவருடைய பணி மிகவும் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. நான் அவரை எப்படி பார்க்கிறேன் என்றால் மோடி அரசை கொள்கை ரீதியாக எதிர்ப்பவராகத்தான் நான் பார்க்கிறேன் என கேஎஸ் அழகிரி தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

நேருவின் வாரிசு பேசுவதை கோட்சேவின் வாரிசுகளுக்கு கசக்கத்தான் செய்யும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Follow Us:
Download App:
  • android
  • ios