காலியாகும் டிடிவி.தினகரன் கூடாராம்.. முக்கிய மாவட்ட செயலாளர்களை தட்டித்தூக்கிய சி.வி.சண்முகம்..!
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே ஒற்றை தலைமை விவகாரம் உச்சக்கட்ட மோதல் நீட்டித்து வரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்குள் டிடிவி.தினகரன் கட்சியை ஒழிக்க வேண்டும் என அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
விழுப்புரம் அமமுக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அய்யனார் ஆகியோர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவம் டிடிவி.தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே ஒற்றை தலைமை விவகாரம் உச்சக்கட்ட மோதல் நீட்டித்து வரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்குள் டிடிவி.தினகரன் கட்சியை ஒழிக்க வேண்டும் என அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதன் முன்னோட்டமாக விழுப்புரம் அமமுக வடக்கு மாவட்ட செயலாளரும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி மண்டல பொறுப்பாளருமான பாலசுந்தரம், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அய்யனார் ஆகியோர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்து டிடிவி.தினகரனை கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ளார். இன்று முறைப்படி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைய உள்ளார்.
இதையும் படிங்க;- நாடாளுமன்ற தேர்தலில் திமுக, பாஜக கூட்டணி - சி.வி.சண்முகம் கணிப்பு
இந்நிலையில், அமமுகவில் இருந்து விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் பாலசுந்தரம் மற்றும் அய்யனார் ஆகியோர் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அமமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் R.பாலசுந்தரம் மற்றும் விழுப்புரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் R.அய்யனார் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத்தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- எம்எல்ஏவாக கூட தகுதியில்லாதவர் தினகரன்.. உங்க அட்வைஸ் எங்களுக்கு தேவையில்லை.. சீறும் சி.வி.சண்முகம்.!