Asianet News TamilAsianet News Tamil

செங்கோல் கொடுப்பதால் தமிழர்களுக்கு எந்த பயனும் கிடையாது - சீமான் கருத்து

செங்கோல் கொடுப்பதால் தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை. சோழர் காலத்தில் முடியாட்சியின் போது குடியாட்சி நடைபெற்றது. ஆனால் தற்போது குடியாட்சியில் - முடியாட்சி நடைபெறுகிறது. அதுவும் கொடுங்கோல் ஆட்சி நடைபெறுகிறது என தஞ்சையில்  சீமான் பேட்டி.

there is no use for tamil peoples for providing a scepter says seeman
Author
First Published May 27, 2023, 4:20 PM IST

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலையில் 65 அடி உயர கொடியினை  நாம் தமிழர் கட்சியின் தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், டாஸ்மார்க் மதுபானம் சாமானிய மனிதர்களால் வாங்கி குடிக்க முடியாததால் தான் குறைந்த விலைக்கு கிடைக்க கூடிய மதுவை தேடி செல்கிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் கள்  இறக்கும் போது ஏன் தமிழகத்தில் மட்டும் இறக்கக் கூடாது? முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட அனைவரும் தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக்கை ஒழிப்போம் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் இதுவரை வாய் திறக்கவில்லை.

செங்கோல் கொடுப்பது என்பது ஒரு ஏமாற்று வேலை. ஏற்கனவே முன்னாள் பிரதமர் நேருக்கு செங்கோல் கொடுக்கப்பட்டது. இதனால் தமிழர்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. தமிழர்களின் வாக்கு வங்கியை குறிவைத்து பாஜக செயல்படுகிறது.  செங்கோலை நாடாளுமன்றத்தில் வைக்கும் அவர்கள் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையை ஏன் உள்ளே வைக்காமல்  வெளியே நிறுத்தி இருக்கிறார்கள்?

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் அரிகொம்பன்; 144 தடை உத்தரவு பிறப்பித்த அரசு

ராஜராஜ சோழன் முடியாட்சியில் குடியாட்சி நடத்தினான், ஆனால் தற்பொழுது குடியாட்சியில் முடியாட்சி நடக்கிறது. அதுவும் கொடுங்கோல் ஆட்சியாக நடக்கிறது. செங்கோலை கொடுக்கும்போது ஆதீனங்கள் தேவாரம் பாடும் போது ஏன் இன்னும் பெரிய கோவிலில் உள்ளே பாடவில்லை, ஒரு வேலையாவது பாட சொல்லுங்கள்.

குடும்ப தகராறில் காதல் மனைவி தலையில் கல்லை போட்டு கொடூர கொலை - காவல்துறை விசாரணை

வருமான வரித்துறை சோதனையில் இரு தரப்பிலுமே தவறு உள்ளது. செந்தில் பாலாஜி கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருந்தால் வருமானவரித்துறை சோதனை நடத்திக் கொள்ளுங்கள் என கூற வேண்டியது தானே. அதேபோல் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டில் சோதனை செய்தபோது அவருடைய ரசிகர்கள் இதுபோல் முற்றுகை செய்திருந்தால், எப்படி சோதனை செய்திருக்க முடியும். இதேபோல் எத்தனையோ அதிகாரிகள் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது. அனைவருமே பண பலம் படைத்தவர்கள் இது போல் யாரும் செய்தது கிடையாது. வருமானவரித்துறை சோதனை செய்ய வரும்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சொல்லிவிட்டு வரவேண்டிய அவசியம் இல்லை. இது கூட எஸ்பிக்கு தெரியாதா? இவரெல்லாம் ஒரு ஐபிஎஸ் அதிகாரியா? என கேள்வி எழுப்பினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios