குடும்ப தகராறில் காதல் மனைவி தலையில் கல்லை போட்டு கொடூர கொலை - காவல்துறை விசாரணை

பழனி அருகே பாப்பம்பட்டியில் குடும்ப தகறாரில் காதல் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு கணவன் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

married woman killed by husband in dindugal district

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம்பட்டி எஸ்.கே.சி நகரைச் சேர்ந்தவர் துரை என்கிற திருமூர்த்தி. கட்டிட வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி மாலதி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கணவன் துரை அடிக்கடி மது போதையில் வந்து சண்டையிடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

married woman killed by husband in dindugal district

இந்நிலையில் நேற்று மதியம் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் மனைவி மாலதி தலையில் கணவன் துரை கல்லை போட்டு கொலை செய்துவிட்டு இரண்டு குழந்தைகளுடன் தப்பி ஓடிவிட்டார். அருகில் வசித்து வந்தவர்கள்  இரவு நேரமாகியும் வீட்டில் மின் விளக்குகள் எரியாததை கண்டு வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மாலதி இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

ஈரோட்டில் தலைக்கேறிய போதையில் நடு ரோட்டில் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்; போக்குவரத்து பாதிப்பு

உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாலதியின் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன் துரை இரண்டு குழந்தைகளுடன் தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து பழனி தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து   தீவிரமாக தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த கணவன் கைது செய்யப்பட்டார். பழனியில் குடும்ப பிரச்சனையில் மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசையாக பிரியாணி கேட்ட தொழிலாளி; கூலாக பூரான் பிரியாணியை பார்சல் செய்த ஓட்டல் நிர்வாகம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios