Asianet News TamilAsianet News Tamil

பாஜகவில் எந்த அங்கிகாரமும் இல்ல.. எனக்கு பாதுகாப்பும் இல்ல.. முருகன் கோவில் வாசலில் குமுறிய எஸ்.வி சேகர்.

இப்போது அரசியலில் நான் மவுன விரதம் இருக்கிறேன், எனக்கு கட்சியில் அதிகாரம் கிடைக்கும் வரை அமைதியாக இருக்கலாம் என முடிவு செய்துவிட்டேன் என காமெடி நடிகர் எஸ்.வி சேகர் கூறியுள்ளார்.

There is no recognition in BJP.. I have no security.. SV Shekhar
Author
Thiruchendur, First Published Aug 13, 2022, 4:01 PM IST

இப்போது அரசியலில் நான் மவுன விரதம் இருக்கிறேன், எனக்கு கட்சியில் அதிகாரம் கிடைக்கும் வரை அமைதியாக இருக்கலாம் என முடிவு செய்துவிட்டேன் என காமெடி நடிகர் எஸ்.வி சேகர் கூறியுள்ளார். தான் பாஜகவில் இருந்தாலும் தன்னை அக்கட்சி தொடர்ந்து புறக்கணிக்கிறது என அவர் ஆதங்கம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த எஸ்.வி  சேகருக்கு அரசியல்வாதி என்ற மற்றொரு முகமும் உண்டு, காங்கிரஸ்- அதிமுக- பிறகு மீண்டும் காங்கிரஸ் பின்னர் அங்கிருந்து பாஜக என பல கட்சிகளுக்கு  தாவிய அவர் இந்துத்துவா மற்றும் பாஜகவின் கொள்கை மீது தீவிர பற்று கொண்டவர் ஆவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் பெண் பத்திரிகையாளர் குறித்து அவர் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, அவருக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வெடித்தது.

There is no recognition in BJP.. I have no security.. SV Shekhar

இதையும் படியுங்கள்: அந்த வார்த்தை சொன்ன பிடிஆர்.. கடுப்பான பாஜகவினர் - வெளியான அதிர்ச்சி தகவல் !

அவருக்கு பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன, அவர்  தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டதை அடுத்து ஓரளவுக்கு அது முடிவுக்கு வந்தது. ஆனால் அவர்கள் கைது செய்ய வேண்டுமென கோரிக்கை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் அவர் கைதாகவில்லை, இதேபோல் கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும் பாஜக குறித்து அவர் பேசிய ஆடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக தன்னை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தவில்லை என தனது ஆதங்கத்தை அப்போது வெளிப்படுத்தி இருந்தார்.

இதையும் படியுங்கள்: ஆம்னி பேருந்துகளில் கொள்ளையோ கொள்ளை.. மக்களை தவிக்கவிட்ட போக்குவரத்து துறை.. நோ ஐடியா.? நோ பிளான்.?

கட்சி என்னை பயன்படுத்தாததால் கட்சிக்கு தான் நஷ்டம், தனக்கு இல்லை என்றும் அவர் கூறி வந்தார். அதன்பின்னர் அவர் பெரிய அளவில் அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுக்காமல் இருந்துவந்தார். இந்நிலையில் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் எஸ், வி சேகர், இப்போ அரசியல் இருந்து நான் மௌன விரதம் கடைப்பிடித்து கொண்டிருக்கிறேன், காரணம் என்னவென்றால் நான் சார்ந்திருக்கிற காட்சி எனக்கு உண்டான அங்கீகாரத்தை கொடுக்கிற வரையில் அமைதியாக  இருப்பது சிறந்தது என நினைக்கிறேன்.

There is no recognition in BJP.. I have no security.. SV Shekhar

ஒரு நடிகனாக கலைஞனாக எல்லோருக்கும் பொதுவான நபராக இருப்பது சிறப்பான விஷயம், ஏனென்றால் நாம் ஒரு காட்சிக்காக ஒரு கட்சி சார்ந்து பேசும்போது நமக்கு ஒரு பிரச்சினை வந்தால் அதற்கு அந்த காட்சி பாதுகாப்பு கொடுக்க வேண்டும், அது கொடுக்கிற வரையில் நாம் பொறுத்திருக்க வேண்டும். நான் 1990 இல் இருந்து பாஜகவின் அனுதாபியாக இருந்து வருகிறேன். 2004 ஜெயலலிதா கூப்பிட்டதால் அதிமுகவில் சேர்ந்தேன் பிறகு அவர்களே என்னை அனுப்பி விட்டார்கள், 2013இல்  பாஜகவில் உறுப்பினராக சேர்ந்து உறுப்பினராகவே இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios