ஓபிஎஸ்சுடன் 100 சதவீதம் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை... ஒரே போடாக போட்ட இபிஎஸ்..!
தமிழகத்தில் ஆளும் கட்சியாக திமுக இருந்து வருகிறது. பிற கட்சியை சேர்ந்தவர்கள் தான் ஆளுங்கட்சியில் இணைவது வழக்கம். ஆனால், ஆச்சரியமாக சேலம் மாவட்டம் எடப்பாடியில் 22வது வார்டு திமுக கவுன்சிலர் ரவி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
அதிமுக எதிராக செயல்படுபவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆளும் கட்சியாக திமுக இருந்து வருகிறது. பிற கட்சியை சேர்ந்தவர்கள் தான் ஆளுங்கட்சியில் இணைவது வழக்கம். ஆனால், ஆச்சரியமாக சேலம் மாவட்டம் எடப்பாடியில் 22வது வார்டு திமுக கவுன்சிலர் ரவி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க;- 41 ஆயிரம் கோடி யாருடையது.? இபிஎஸ்சை எச்சரித்த ஜேசிடி பிரபாகர்.? தமிழக அரசு விசாரிக்க வேண்டும்-கே.பாலகிருஷ்ணன்
இதனையடுத்து, சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி;- முக்கிய பொறுப்புகளில் இருக்கும் மூத்த அமைச்சர்கள் பொதுக்கூட்டத்தில் கட்டுப்பாடு இல்லாமல் கருத்தை வெளியிடுவது வேதனையாக உள்ளது. ஏழை, எளிய பெண்கள் தான் கட்டணம் இல்லாமல் பயணம் செய்கிறார்கள். அதை கொச்சைப்படுத்தி பேசுவது சரி அல்ல. இது வருந்தத்தக்கது. இப்படித்தான் பல அமைச்சர்கள் மக்களை அவமானப்படுத்தும் வகையில் பேசுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் தொடர்ந்த வண்ணம் இருப்பது வேதனை அளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்கதையாக இருந்து வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த அரசு கும்பகர்ணனை போல் தூங்கி வருகிறது என்று தெரிவித்தார்.
33 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சி புரிந்த கட்சி பிரதான எதிர்க்கட்சி என பெருமைக்குரியது அதிமுக. சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு கட்சியை உடைக்கவும், முடக்கவும் பார்க்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்த பிறகு பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும். கட்சியை உடைக்க வேண்டும் பிளக்க வேண்டும் என்று செயல்படுபவர்கள் எல்லாம் விரைவில் காற்றோடு கரைந்து போவார்கள். அதிமுகவிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு இனிமேல் அதிமுகவில் இடமில்லை. 100 சதவீதம் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை. அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- அமமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய எடப்பாடியார்.. அதிர்ச்சியில் பாஜக..!