அமமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய எடப்பாடியார்.. அதிர்ச்சியில் பாஜக..!

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அய்யாதுரை பாண்டியனுக்கு தென்மாவட்டங்களில் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு மிக்க தலைவராக இருந்து வந்துள்ளார். 

ayyadurai pandiyan join AIADMK

தென்மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், அமமுகவை சேர்ந்த தென்காசி வடக்கு மாவட்ட செயலாளருமான அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து டிடிவி.தினகரனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அய்யாதுரை பாண்டியனுக்கு தென்மாவட்டங்களில் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு மிக்க தலைவராக இருந்து வந்துள்ளார். இதுமட்டுமல்லாமல் தென்காசி மாவட்டத்தில் ஏழை எளிய வீட்டு பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்று உதவி செய்து வருகிறார். அய்யாதுரை பாண்டியன் பேரவை என்ற பெயரில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வந்தார்.

ayyadurai pandiyan join AIADMK

இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அய்யாதுரை பாண்டியனுக்கு சீட் மறுக்கப்பட்டதால் திமுகவில் இருந்து வெளியேறிய அமமுகவில் இணைந்தார். இதனையடுத்து, அவருக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், டி.டி.வி தினகரன் மற்றும் மாணிக்கராஜா செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்ததால் கட்சியிலிருந்து வெளியேறி தனது தொழில்களை மட்டும் கவனித்து வந்தார். இவரது செல்வாக்கை அறிந்த பாஜக எப்படியாவது அய்யாதுரை பாண்டியனை வளைத்துபோட திட்டமிட்டது. 

ayyadurai pandiyan join AIADMK

இதனையறிந்த எடப்பாடி பழனிசாமி முந்திக் கொண்டு அய்யாதுரை பாண்டியனை அதிமுகவில் இழுத்துள்ளார். அய்யாதுரை பாண்டியன் அதிமுகவில் இணைவதற்கு முக்கிய காரணம் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா என்று கூறப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios