Asianet News TamilAsianet News Tamil

41 ஆயிரம் கோடி யாருடையது.? இபிஎஸ்சை எச்சரித்த ஜேசிடி பிரபாகர்.? தமிழக அரசு விசாரிக்க வேண்டும்-கே.பாலகிருஷ்ணன்

ஓ.பி.எஸ் தரப்பினரான ஜேசிடி பிரபாகரன், எடப்பாடி பழனிச்சாமியை எச்சரிக்கும் பேச்சு ஊடகங்களில் வந்துள்ளது. 41 ஆயிரம் கோடு அவ்வளவு பிரம்மாண்டமான தொகை யாருடையது? அது ஏதாவது கணக்கிற்கு உட்பட்டதா?  வருமான வரி செலுத்தப்பட்டதா?  அரசு தலையிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
 

JCD Prabhakar who threatened the EPS team should be investigated
Author
First Published Oct 6, 2022, 4:16 PM IST

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ் தரப்பு இபிஎஸ் அணியினரையும், இபிஎஸ் தரப்பு ஓபிஎஸ் அணியினரையும் விமர்சித்து வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி, எடப்பாடி பழனிசாமி அணிக்கு எச்சரிக்கை விடுத்தார். அப்போது அவர் பேசுகையில், வழக்கில் சிக்கி விடாமல் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேரம் பேசிய உண்மைகள், யார் திமுகவுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறார்கள், யார் திமுகவுக்கு சாதகமாக இருக்கிறார்கள் என்பது பற்றி விரிவான விளக்கங்கள் வரும் மாதங்களில் வெளியிடப்படும் என கூறினார். நவம்பர் 21-ம் தேதிக்கு முன்பாகவே அந்த தகவல்கள் வெளிக்கொண்டுவரப்படும் என்றும் ஓபிஎஸ் அனுமதி அளித்தால் ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை விரைவில் வெளியிடுவேன் என தெரிவித்து இருந்தார்.

JCD Prabhakar who threatened the EPS team should be investigated

அப்போது வெட்டவெளிச்சமாக இந்த நாட்டு மக்களுக்கு தெரியவரும் என கூறியிருந்தார். இந்த தகவல் எடப்பாடி பழனிசாமி அணியினர் மட்டுமில்லாமல் தமிழக அரசியல் வட்டாரத்தை பரபரப்புக்குள்ளாக்கியது. இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிடுவேன்' என்று அதிமுகவின் ஓ.பி.எஸ் தரப்பினரான ஜேசிடி பிரபாகரன், எடப்பாடி பழனிச்சாமியை எச்சரிக்கும் பேச்சு ஊடகங்களில் வந்துள்ளது. அவ்வளவு பிரம்மாண்டமான தொகை யாருடையது? அது ஏதாவது கணக்கிற்கு உட்பட்டதா?  வருமான வரி செலுத்தப்பட்டதா?  அரசு தலையிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

பேருந்தில் எத்தனை மகளிர் இலவசமாக பயணித்துள்ளார்கள் தெரியுமா..? போக்குவரத்து துறை வெளியிட்ட புதிய தகவல்

Follow Us:
Download App:
  • android
  • ios