எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து ஓபிஎஸ் ஆதரவாளர்களால் தமிழம் முழுவதும் ஒட்டப்படும் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக அதிகார மோதல்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக பல அணியாக அதிமுக பிளவுபட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அதிக வாக்கு சதவிகிதம் என்ற நிலையை கொண்டிருந்த அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 90 சதவிகித்த்திற்கு மேல் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் சட்ட போராட்டம் நடத்தினார். உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பானது வெளியானது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

பாஜக பிரமுகர்களை தொடர்ந்து அமமுக முக்கிய நிர்வாகிகளை தட்டித்தூக்கிய இபிஎஸ்.. அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்.!

அதிமுகவில் இருந்து வெளியேறு

இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் அணி சார்பாக சிவகங்கை மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அதிமுகவின் சீரழிவிற்கு எடப்பாடி தான் காரணம் என விமர்சிக்கப்பட்டது. இந்தநிலையில் தேனி மாவட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் பதவியில் இருந்த அம்மாவை நீக்கிவிட்டு பொய் வேஷம் போடும் பதவி வெறி பிடித்த பழனிசாமியே அதிமுகவில் இருந்து வெளியேறு என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

சாதிக் கொடுமையில் சிக்கி தவிக்கும் தமிழகம்..! திமுக அரசின் சமூக நீதி தோல்வி- சீறும் பாஜக