சனாதனம் குறித்து பேசிய உதயநிதி, ஆதரவு தெரிவித்த கர்நாடக அமைச்சர் மீதும் உத்தரப்பிரதேச போலீசார் வழக்கு பதிவு

சனாதனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி பேசியதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், உத்தரபிரதேச மாநில காவல் நிலையில் உதயநிதி மீதும் அவருடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்த கர்நாடக அமைச்சர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
 

The Uttar Pradesh police have also registered a case against Udhayanidhi who spoke about Sanathanam and the Karnataka minister who supported him Kak

சனாதனம்- உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி, கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றை எதிர்க்க முடியாது, ஒழிக்க வேண்டும். அந்த வகையில், சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும் என தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும்  அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா உதயநிதி தலையை சீவினால் 10 கோடி ரூபாய் பரிசு தருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

The Uttar Pradesh police have also registered a case against Udhayanidhi who spoke about Sanathanam and the Karnataka minister who supported him Kak

உதயநிதி தலைக்கு 10 கோடி

இதே போல மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக நிர்வாகிகள் உதயநிதியின் சனாதனம் தொடர்பான பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும் பல்வேறு காவல் நிலையத்தில் புகாரும் தெரிவிக்கப்பட்டது.இதற்கு பதிலடி கொடுத்த உதயநிதி, சனாதனம் பற்றி நான் பேசியது சரியானது தான். பா.ஜ.க.வினர் நான் பேசியதை திரித்து பேசி வருகின்றனர். எல்லோருக்கும், எல்லாமே கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். பல ஆண்டுகளுக்கு முன் பெண்கள் படிக்கக்கூடாது என்று கூறினார்கள், பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று கூறினார்கள், கோயில்களுக்குள் செல்லக்கூடாது என்றார்கள். இந்த மூன்றையும் நாம் மாற்றி இருக்கிறோம்.

The Uttar Pradesh police have also registered a case against Udhayanidhi who spoke about Sanathanam and the Karnataka minister who supported him Kak

உதயநிதி மீது வழக்கு பதிவு

இதுதான் திராவிட மாடல் என குறிப்பிட்டார்.  இனிமேலும் அப்படித்தான் பேசுவேன்.எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என உதயநிதி தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் உதயநிதி மீது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் உதயநிதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உதயநிதியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த கர்நாடக மாநில அமைச்சர் பிரியங் கார்கே மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

உதயநிதி பேசியதில் ஒன்றும் தவறில்லை... கலைஞரின் பேரன், இதைவிட வேறென்ன பேசமுடியும்-ஆதரவாக களம் இறங்கிய காங்கிரஸ்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios