"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்டோம்" என்ற  234 தொகுதிகளையும் உள்ளடக்கிய சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த பெருந்துயரத்தால் தற்போது அவரது பிரச்சாரப்பயணம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர், வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சோக சம்பவத்தைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கரூருக்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 7-ம் தேதி கோயம்புத்தூர், மேட்டுப்பாளையத்தில் தொடங்கி, "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்டோம்" என்ற மக்கள் சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறார். 234 தொகுதிகளையும் உள்ளடக்கிய சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த பெருந்துயரத்தால் தற்போது அவரது பிரச்சாரப்பயணம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தொகுதி வாரியான ஐந்தாம் கட்ட தொடர் பிரச்சார திட்டத்தில் வரும் 29,30, அடுத்த மாதம் 4ம் தேதி ஆகிய நாட்களில் நடைபெற இருந்த சுற்றுப் பயணத் திட்டம் அடுத்த மாதம் 2, 3, 6 ஆகிய தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் இந்த பிரச்சாரம் 5.10.2025 வரை தொடர் பிரச்சாரம் செய்திடும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த ஐந்தாம் கட்ட சுற்றுப் பயணத் திட்டத்தில், 29.9.2025, 30.9.2025 மற்றும் 4.10.2025 ஆகிய தேதிகளில் தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, 2.10.2025, 3.10.2025 மற்றும் 6.10.2025 நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, தருமபுரி பாப்பிரெட்டிபட்டி அரூர், 3.10.2025. தருமபுரி, பாலக்கோடு பென்னாகரம், 6.10.2025 -நாமக்கல், நாமக்கல் பரமத்தி வேலூர்.

ஏற்கெனவே 5.10.2025 ஞாயிற்றுக் கிழமை அன்று, நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய தொகுதிகளில் நடைபெறுவதாக அறிவித்திருந்த பிரச்சாரக் கூட்டம், அதே தேதியான 5.10.2025 ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.