- Home
- Politics
- திமுக Ego System எப்படி வேலை செய்யும்னு இனிமேல் தான் பார்க்கப்போறீங்க..! தவெக தம்பிகளுக்கு நாதக எச்சரிக்கை..!
திமுக Ego System எப்படி வேலை செய்யும்னு இனிமேல் தான் பார்க்கப்போறீங்க..! தவெக தம்பிகளுக்கு நாதக எச்சரிக்கை..!
இங்கே காலம் காலமாக அரச பரம்பரை மாதிரி ஒரே குடும்பம் மட்டும்தான் காலூன்றி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என பலதரப்பட்ட மைக்ரோ அரசியல் அணுகுமுறை நடக்கிறது. இதற்கென்று தனி ஆட்கள் முதல் அதிகார கும்பல்கள் வரை ஒவ்வொரு இடத்திலும் செயல்படுகிறது.

சீமான், 39 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை அறிந்ததும் கரூருக்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். உறவினர்களுடன் பேசி ஆறுதல் கூறினார் மற்றும் சிகிச்சையில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தம்பி மீது நடவடிக்கை எடுத்தால் அண்ணனுக்கு என்ன மகிழ்ச்சியாகவா இருக்கும்? சந்தோஷமாக இருக்குமா? எனக்கு 260 வழக்கு இருக்கிறது. விஜய்க்கு இது புது வழக்கு. இது நடந்து விட்டது, விஜய்க்கு தெரியும் இதில் அவர் என்ன செய்யவேண்டும் என்பது’’ எனத் தெரிவித்தார். எதிராக இருந்த தவெகவுக்கு, நாதகவும் இப்போது சமூக வலைதளங்களில் அட்வைஸ் மழை பொழிந்து வருகிறார்கள்.
‘‘தவெகவினர்களே, இக்கட்டான பெருந்துயர சூழலில் உங்களுக்கு ஆறுதலாக இருக்கிறார் அண்ணன் சீமான். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை வைத்து தரம்தாழ்ந்த அரசியலை என்றைக்கும் செய்ய மாட்டார். சீமானை வெட்டுவேன், குத்துவேன், அவன் செத்துபோயிடுவான், அவன், இவன் என்று ஆபாசமாகவும் மரியாதைகுறைவாகவும் பேசிய விஜய் ரசிகர்களே! விஜய் இருக்க வேண்டிய இடத்தில் அண்ணன் சீமான் தான் நிற்கிறார். சீமான் சாகணும், சீமான் ஒழிக, சீமான் அழிஞ்சி போயிடுவான்... நாம் தமிழர் கட்சி அழிஞ்சி போயிடும் என எவ்வளவு வசை சொற்கள்?
கடைசியில் அவர் மட்டும்தான் கூட இருப்பார் என கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். சீமானுடன் நிறைய கருத்து வேறுபாடு இருந்தாலும், விஜய்க்கு எதாவது ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக சீமான் தான் குரல் கொடுக்கிறார். போதிக்க வேண்டிய நேரத்தில் கோவமாக போதிப்பார். கூட நிற்க வேண்டிய நேரத்தில் அன்புடன் கூட நிற்பார். அது தான் அண்ணன் சீமான்.
திமுகவை சாதாரணமாக எடை போட்டு விட்டீர்கள் விஜய் அண்ணா... சீமான் அண்ணன் சீமான் சொன்னது ஞாபகம் இல்லாமல் பேச்சு உங்களுக்கு. முதலைகள் நடமாடும் குளம் என அண்ணன் சீமான் சொன்னது ஞாபகம் வந்துருச்சா சார்? அறிவுரை சொன்னதற்கு கிண்டல் செய்தீர்களே சார்... விஜயகாந்தை ஏன் குடிகாரனாக சித்தரித்தார்கள்..? திருமா, அன்புமணியை ஏன் ஒரு குறிப்பிட்ட சமூக தலைவராக மட்டுமே அடக்கிக் கொண்டார்கள்? சீமான் பேசும் எந்தவொரு விஷயத்தையும் ஜோக்குகளாக மாற்றுகிறார்கள்..? இப்போது விஜய்யை தற்குறி கூட்டத்தின் தலைவன் போல் கட்டமைக்கிறார்கள். இதெல்லாம் நிதானமாக யோசித்தால் ஓரளவு அரசியல் புரிதல் வரும்.
இங்கே காலம் காலமாக அரச பரம்பரை மாதிரி ஒரே குடும்பம் மட்டும்தான் காலூன்றி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என பலதரப்பட்ட மைக்ரோ அரசியல் அணுகுமுறை நடக்கிறது. இதற்கென்று தனி ஆட்கள் முதல் அதிகார கும்பல்கள் வரை ஒவ்வொரு இடத்திலும் செயல்படுகிறது. இதையெல்லாம் அவ்வளவு எளிதாக உடைக்க முடியாது. அப்படி உடைக்க வேண்டுமென்றால் கூட்டு முயற்சிகள் வேண்டும். இதெல்லாம் செய்து முடிப்பதற்குள் அவர்கள் உங்கள் பலத்தையே பலவீனமாக்கி கதையை முடித்து விடுவார்கள்.
விஜயகாந்தை ஏன் குடிகாரனாக சித்தரிச்சானுங்க? திருமா, அன்புமணியை ஏன் ஒரு குறிப்பிட்ட சமூக தலைவராக மட்டுமே அடக்கிட்டானுங்க? சீமான் பேசும் எந்தவொரு விஷயத்தையும் ஜோக்குகளாக மாத்துறானுங்க? இப்ப விஜய்யை தற்குறி கூட்டத்தின் தலைவன் போல் கட்டமைக்கிறாங்க. இதெல்லாம் நிதானமாக யோசிச்சா ஓரளவு… pic.twitter.com/5gUG7guMAf
— புல்லட் வண்டி 😈🧛 (@iam_vampire_0) September 28, 2025
எந்த கூட்டத்தை மரண மாஸ் என கெத்தா சொன்னீர்களே... அதே கூட்டத்தில் மரண பயத்தை ஏற்படுத்தினான் பார்த்தீர்களா?இதான் அவர்களது அரசியல் அனுபவம். தவெக எல்லாம் அவர்களுக்கு வெறும் பச்சா... புரியவில்லையா? நீங்கள் எல்லாம் அவர்களுக்கு வெறும் குழந்தைகள்தான். அரசியலை விளையாட்டாக எடுத்துக் கொண்டீர்கள். திரையில் அரசியல் வசனம் பேசி கலைந்து விட்டுப் போவதில்லை அரசியல். தரையில் கொஞ்சி கடிக்கிற மீன்கள் இல்லை. முதலைகள் நிறைந்த குளம் என்று அண்ணன் சீமான் சொல்லும் போது அதை அலட்சியபடுத்தலின் விளைவே இந்த இறப்புகளுக்கான காரணம்.
Dmk சாதாரணமா எடை போட்டுட்டியா Actor Vijay அண்ணா..
அண்ணன் சீமான் சொன்னது ஞாபகம் இல்லாமல் பேச்சு உனக்கு.. முதலைகள் நடமாடும் குளம்_னு அண்ணன் சீமான் சொன்னது ஞாபகம் வந்துருச்சா சார்?
~~அறிவுரை சொன்னதுக்கு கிண்டல் பண்ணீங்களே சார்..@TVKVijayHQ#tvkfails#tvkpic.twitter.com/90w0T4tWHR— DHANASELAN B (@BDhanasela21699) September 28, 2025
தவெக ரசிகர்களுக்கு சீமான், விஜய்யை கொள்கை ரீதியாக விமர்சித்தது தான் பெரிய விஷயமாகத் தெரிந்தது. டேய் தம்பிகளா இனிமேல் தான் தெரியப்போகிறது உங்களுக்கு திமுக எவ்வளவு கொடுரமான கட்சி என்று. திமுக Ego System எப்படி வேலை செய்யும் enRu இனிமேல் தான் பார்க்கப்போறீங்க..!'' என தவெக தம்பிகளுக்கு நாதகவினர் எச்சரிக்கை பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.