- Home
- Politics
- தம்பி விஜய்க்கு இது புதுசு..! என்ன செய்யப்போகிறார் பாவம்..? கரூர் நிலவரம் உடைக்கும் சீமான்..!
தம்பி விஜய்க்கு இது புதுசு..! என்ன செய்யப்போகிறார் பாவம்..? கரூர் நிலவரம் உடைக்கும் சீமான்..!
தம்பி மீது நடவடிக்கை எடுத்தால் அண்ணனுக்கு என்ன மகிழ்ச்சியாகவா இருக்கும்? சந்தோஷமாக இருக்குமா? எனக்கு 260 வழக்கு இருக்கிறது. நான் ஏறாத நீதிமன்றம், படிக்கட்டுகள் கிடையாது. வழக்கு அது இல்லையென்றால் விடியாது கிழக்கு என்ற நிலை தான் எனக்கு.

அருணா ஜெகதீசன் விசாரணை கமிட்டி
தம்பி விஜய் மேல் நடவடிக்கை எடுத்தால் நான் சந்தோஷப்படுவேனா? வருத்தம் தான் அடைவேன் என கரூரில் அஞ்சலி செலுத்தியபின் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சீமான், இந்த சம்பவத்தை அறிந்ததும் கரூருக்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். உறவினர்களுடன் பேசி ஆறுதல் கூறினார் மற்றும் சிகிச்சையில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘ தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இரண்டு மாதங்களில் நடவடிக்கை வைப்பேன் என்று அன்று எதிர்க்கட்சியாக இருந்த இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் சொன்னார். ஆளுங்கட்சியாக இருக்கும்போது இந்த கரூர் விவகாரத்தில் இதே அம்மா அருணா ஜெகதீசன் விசாரணை கமிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதில் விசாரிக்க என்ன இருக்கிறது?
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் 3 மணி நேரம் நேரில் நின்று சாட்சிகள் சொன்னவன் நான் தான். எதிரில் ஒரு கட்சியை தலைமை ஏற்று வழி நடத்துகிறவன் என்ற முறையில் நான் மட்டும்தான் மூன்று மணி நேரம் சாட்சியங்கள் சொன்னேன். ஆனால் அவர்கள் அறிக்கை தாக்கல் செய்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இந்த துப்பாக்கி சூட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எல்லாம் பணியிட மாற்றம், பணி உயர்வு பெற்று இருக்கிறார்கள். அதே தான் நடக்கும்.
ஒரு ஆறு மாதம் அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி ஒரு தகவல் செய்வார். காயத்தை மறந்து விடுவீர்கள். வேறு பக்கம் சென்று விடுவீர்கள். இன்னும் இரண்டு, மூன்று மாதத்தில் தேர்தல் தீவிரம் அடைந்து விட்டால் இதை யார் பேசுவார். இன்னைக்கு செய்தி, நாளைக்கு செய்தி.பிறந்தவர்களை அடக்கம் செய்து விட்டால் அது முடிந்துவிட்ட செய்தி. அப்புறம் என்ன இருக்கிறது? நடவடிக்கை என்ன இருக்கிறது? நீதிபதி விசாரணைக்கு காத்திருப்போம். இது என்ன புதுசா? வெளிப்படையாக தெரிந்து விட்டது. இதில் விசாரிக்க என்ன இருக்கிறது?
விசாரணை என்பது ஒரு சடங்கு
கூட்டடத்தில் சிட்டி விட்டார்கள். நமது பிள்ளைகள் இறந்து விட்டார்கள், அவ்வளவுதான். தங்கச்சி ஸ்ரீமதி மரணத்தில் விசாரிக்கிறார்கள், இன்னும் தான் விசாரிக்கிறார்கள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா என நாடு நாடாக சென்றா விசாரிகிறார்கள்? ஒரு கிராமம், அந்த கிராமத்தில் என்ன நடந்தது என்று விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு இவ்வளவு நாட்களா? விசாரணை என்பது ஒரு சடங்கு. அந்த சடங்கை அரசு செய்கிறது. நாம் அதை ஏற்க வேண்டியது தான். வேற வழி என்ன இருக்கிறது? கரூர் கூட்ட நெரிசலுக்கு காவல்துறையை நான் குறை சொல்லவில்லை.
இத்தனை ஊரில் விஜய் கூட்டம் நடத்தும்போது அவர்களை பாதுகாத்தவர்கள். இதில் சந்தேகம் இருக்கிறது என்றால் விசாரிக்கிறார்கள் அல்லவா? அதில் தெரிய வந்துவிடும். எல்லாத்துக்கும் கருத்து சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க கூடாது. அந்தக் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்ததாக சொல்கிறார்கள். எனக்கு தெரிந்து அந்தப் பகுதியில் மயக்கம் போட்டு விழுந்த ஒருவரை தூக்கிப் போனதாக தான் அந்த ஊர்தி வந்ததாக சொல்கிறார்கள்.
இதை விஜய் பார்த்துக் கொள்வார்
எங்கள் கூட்டங்களில் எல்லாம் அவசர உறுதி வரும். ஆனாலும் அதை ஒன்றும் செய்ய முடியாது. எங்கள் பிள்ளைகள் அழகாக ஒதுங்கி அதற்கு வழி விடுவார்கள். ஆனால் எல்லாமே சும்மா விடுகிறார்கள் என்றும் சொல்ல முடியாது. ஒருவேளை உயிருக்கு போராடி ஆபத்தானவர்களை கொண்டு செல்லும்போது நாம் ஒன்றும் செய்ய முடியாது.காவல்துறை நாங்கள் கொடுத்த விதிகளை பின்பற்றவில்லை என்கிறார்கள். தவெகவினர் இதில் சதி இருப்பதாக சொல்கிறார்கள். இப்போது பிரச்சினை, இழப்பு இழப்புதான். இறந்தவர்கள் இறந்தவர்கள் தான். இது ஒரு வழக்கு, அதை எதிர் கொள்ள வேண்டும். வழக்கு புனையப்பட்டவர்க: எல்லாம் அவர்களாகவா இந்த விபத்தை திட்டமிட்டு ஏற்படுத்தினார்கள்? அப்படி பார்க்க முடியாது.
தம்பி மீது நடவடிக்கை எடுத்தால் அண்ணனுக்கு என்ன மகிழ்ச்சியாகவா இருக்கும்? சந்தோஷமாக இருக்குமா? எனக்கு 260 வழக்கு இருக்கிறது. விஜய்க்கு இது புது வழக்கு. நான் ஏறாத நீதிமன்றம், படிக்கட்டுகள் கிடையாது. வழக்கு அது இல்லையென்றால் விடியாது கிழக்கு என்ற நிலை தான் எனக்கு. சிறை அதை நிறை, தடை அதை உடை என்று போவோம். எங்களை பயிற்றுவித்த தலைவன் அப்படி. உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். தயவு செய்து என்னை கைது பண்ணுங்கள் என்றெல்லாம் நான் கெஞ்சி இருக்கிறேன். இது நடந்து விட்டது, விஜய்க்கு தெரியும் இதில் அவர் என்ன செய்யவேண்டும் என்பது’’ எனத் தெரிவித்துள்ளார்.