Asianet News TamilAsianet News Tamil

ஆளுநர் உரையோடு நாளை தொடங்குகிறது சட்டப்பேரவை கூட்டம்.!ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கீடு.! இபிஎஸ் அணி பங்கேற்குமா?

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையோடு நாளை தொடங்கவுள்ள நிலையில், கடந்த முறை போன்று ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிசாமி அணியினர் சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.   
 

The Tamil Nadu Legislative Assembly will begin tomorrow with the Governor speech
Author
First Published Jan 8, 2023, 10:53 AM IST

தமிழக சட்டப்பேரவை கூட்டம்

தமிழக சட்டபேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நாளை காலை {9ம்தேதி} கூடுகிறது. காலை 10 மணிக்கு கூடும் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார். சட்டபேரவைக்கு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை தலைமைச் செயலக வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு, அரசு தலைமைக் கொறடா கோவி செழியன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்ப்பார்கள். இதனையடுத்து ஆளுநர் ஆர் என் ரவியை சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் சட்டசபை மண்டபத்திற்கு அழைத்து வருவார்கள். அவர் வரும் வழியில் சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டு இருக்கும். ஆளுநர் உள்ளே வந்ததும் சபாநாயகர் இருக்கையில் அமர்வார். அவருக்கு அருகே சபாநாயகர் தனி இருக்கையில் உட்காருவார்.

ஆளுநரை விமர்சிக்க திமுகவினருக்கு என்ன தகுதி உள்ளது.?ஆட்சியின் குளறுபடியை மறைக்க திசை திருப்ப முயற்சி- அண்ணாமலை

The Tamil Nadu Legislative Assembly will begin tomorrow with the Governor speech

ஆளுநர் ஆர் என் ரவிக்கு வரவேற்பு

இதனை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தனது உரையை வாசிப்பார். மக்கள் நலத்திட்டங்களின் நிலை, அவற்றை அரசு செயல்படுத்தும் விதம், அரசின் புதிய கொள்கைகள், புதிய திட்டங்கள் பற்றி அவர் உரை நிகழ்த்துவார். சுமார் ஒரு மணிநேரம் கவர்னர் உரை நிகழும். அதைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் வாசிப்பார். காகிதம் இல்லாத சட்டசபை என்பதால், அவர்களின் உரைகள், சட்டசபையில் உள்ள தொடுதிரை கணினிகளில் திரையிடப்படும். உரையை சபாநாயகர் வாசித்து முடிந்ததும் அன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். பின்னர் சபாநாயகர் அலுவலகத்தில் அவர் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். அதில் ஆளும் கட்சி, எதிர்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். அவையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? அதில் என்னென்ன அலுவல்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்..! அரசியல் சாசனத்திற்கு விரோதமானது- கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்

The Tamil Nadu Legislative Assembly will begin tomorrow with the Governor speech

சட்ட சபை ஒத்திவைப்பு

மறுநாள் 10-ந் தேதி சட்டசபை கூடியதும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.யாக இருந்த திருமகன் ஈவெராவின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படும். அவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் அன்று முழுவதும் அவை ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 11-ந் தேதியன்று சட்டசபையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது விவாதிக்க எம்.எல்.ஏ.க்கள் அழைக்கப்படுவார்கள். சட்டசபை கூட்டத் தொடரின் இறுதி நாளில் எம்.எல்.ஏ.க்களின் விவாதத்திற்கு முதல்-அமைச்சர் பதிலளிப்பார். முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவார்.

The Tamil Nadu Legislative Assembly will begin tomorrow with the Governor speech

பிரச்சனை எழுப்ப திட்டமிடும் எதிர்கட்சிகள்

இந்த கூட்டத் தொடரின்போது ஆளும் கட்சி மீது எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்ப உள்ளன. சட்டம் ஒழுங்கு, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு, பரந்தூர் விமான நிலையம், விவசாயிகளுக்கு நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இந்த கூட்டத் தொடரில் எழுப்பப்படும். அதற்கு முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். எனவே இந்த சட்டசபை கூட்டத் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அந்தஸ்துடன் முதல் முறையாக சட்டசபேரவை நுழைகிறார்.அவருக்கு சட்டசபையில் 10-வது இடம் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் ரகுபதிக்கு இடையில் அளிக்கப்பட்டுள்ளது.

The Tamil Nadu Legislative Assembly will begin tomorrow with the Governor speech

இபிஎஸ் அணி பங்கேற்குமா.?

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது சபாநாயகரின் குறிப்புரை வழங்கப்பட்டது. அதில் வேறு எந்த மாற்றங்களும் ஏற்படவிலை. எனவே இருக்கை மாற்றம் குறித்த வேண்டுகோளை எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் எழுப்ப வாய்ப்புள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் அரு அருகே அமரும் வகையில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளதால் கடந்த முறை போல் எடப்பாடி பழனிசாமி அணியினர் சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணிப்பாளர்களா என்பது தெரியவரும்.

இதையும் படியுங்கள்

திராவிட கொள்கைக்கு எதிரானவர் ஆர்.என்.ரவி..! சட்டப்பேரவையில் உரையாற்ற தகுதியில்லை- திருமாவளவன் ஆவேசம்

Follow Us:
Download App:
  • android
  • ios