ஆளுநரை விமர்சிக்க திமுகவினருக்கு என்ன தகுதி உள்ளது.?ஆட்சியின் குளறுபடியை மறைக்க திசை திருப்ப முயற்சி- அண்ணாமலை

 தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்பது பொருத்தமாக இருக்கும் என்பது தமிழக ஆளுநரின் கருத்து. அதை திமுகவினர் ஏற்க வேண்டும் என்று ஆளுநர் நிர்பந்திக்கவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

Annamalai said that DMK has no right to criticize the Governor

தமிழகமே சரி

காசி தமிழ்சங்கத்திற்கு ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா  சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என்றும், ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்பதால் பாரதத்தின் பகுதி தமிழகம் என்பதுதான் சரி என கூறியிருந்தார். இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். குறிப்பாக ஆளுநரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

2024 நாடாளுமன்ற தேர்தல்; அதிமுக - பாஜக கூட்டணி உறுதியா? அண்ணாமலை கொடுத்த ஷாக் அப்டேட் !!

Annamalai said that DMK has no right to criticize the Governor

ஆளுநரை விமர்சிக்க என்ன தகுதி உள்ளது

இந்தநிலையில் ஆளுநர் ஆர் என் ரவிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஜக மாநில தலைவர்அண்ணாமலை அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திராவிட நாடு கோரிக்கை நீர்த்துப் போகவில்லை என்றும் சொந்த நாடு கேட்க எங்களை வற்புறுத்தாதீர்கள் என்றும் பிரிவினைவாத கருத்துக்களை எடுத்துரைக்கும் திமுக கட்சியினருக்கு தமிழக ஆளுநரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது? தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று சொல்லும் நீங்கள் ஆளுநரின் உரையில் என்ன குறை கண்டீர்? சங்க கால இலக்கியங்களில் தமிழகம், தமிழ்நாடு என்ற இரு சொற்களும் இடம்பெற்றிருக்கின்றன. தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்பது பொருத்தமாக இருக்கும் என்பது மாண்புமிகு தமிழக ஆளுநரின் கருத்து. அதை திமுகவினர் ஏற்க வேண்டும் என்று ஆளுநர் நிர்பந்திக்கவில்லை. 

 

திசை திருப்ப முயற்சி

1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநில புனரமைவுக்குப் பிறகு திராவிட நாடு கோரிக்கை தனித்தமிழ்நாடு என்று சுருங்கியது. இன்றளவும் தனித்தமிழ்நாடு என்ற கோரிக்கையை முன்வைத்து முழங்கும் பிரிவினைவாத விஷ செடிகளை வளர்த்து விட்டதில் திமுகவின் பங்கு அனைவரும் அறிவர்.வழக்கம்போல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஆட்சியில் உள்ள குளறுபடிகளை மறைப்பதற்காக திசைதிருப்பும் முயற்சியாகவே திமுகவினரின் செயல்பாடுகள் உள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

திருமாவளவன் வாழத்தெரியாதவர்.. ரொம்ப கஷ்டம்.! உணர்ச்சிவசப்பட்ட பாரதிராஜா - உருகிய திருமா!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios