திருமாவளவன் வாழத்தெரியாதவர்.. ரொம்ப கஷ்டம்.! உணர்ச்சிவசப்பட்ட பாரதிராஜா - உருகிய திருமா!
நான் பார்த்த வகையில் கை சுத்தமுள்ள அரசியல்வாதி திருமாவளவன். காமராஜர், கக்கன், ஜீவா போன்று சுத்தமானவர். - இயக்குநர் பாரதிராஜா.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாள் மணிவிழாவாக கொண்டாடப்பட்டது. இதில் இயக்குநர் இமயம் என்று அனைவராலும் அழைக்கப்படும் பாரதிராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் திருமாவளவனை புகழ்ந்து பேசினார்.
அவர் பேசும் போது, எனக்கு சோர்வு வரும்போதெல்லாம் அவரின் மீசையை பார்த்தால் புத்துணர்ச்சி கிடைக்கும். கம்பீரமும் துணிச்சலும் கொண்ட மீசை மனிதன். மரியாதையின் உச்சமாக அவரை பார்க்கிறேன். இந்தப் பிள்ளை தனக்கான வாழ்க்கையை அமைத்து கொள்ளவில்லை என்பது வருத்தம். திருமணம் செய்தால் சுயநலமாகி விடுவோமோ என்ற எண்ணமாக இருக்கலாம்.
இதையும் படிங்க..ஒரு நபரின் கையில் ஒட்டுமொத்த திரையரங்குகளா? உதயநிதி ஸ்டாலினை சீண்டிய திருமாவளவன்.. பயங்கர ட்விஸ்ட்!!
நான் பார்த்த வகையில் கை சுத்தமுள்ள அரசியல்வாதி திருமாவளவன். காமராஜர், கக்கன், ஜீவா போன்று சுத்தமானவர். ஆனால் வாழத்தெரியாதவர். பிரபாகரனுக்கு பின் நான் ரசித்த தலைவன் திருமாவளவன். அரசியலில் நாணயத்தை காப்பது கஷ்டம். ஆனால் அவர் காப்பாற்றுகிறார். திருமாவின் கைப்பிடித்தாலே ஒரு சுகம் தான்.
தொடர்ந்து பேசிய அவர், ஐ லைக் யூ திருமா. சிம்மக்குரலோன் சிவாஜி என்பார்கள். ஆனால் அதையும் தாண்டி கர்ஜிக்கும் பேச்சாளர் திருமாவளவன். சனாதனம் வேரோடு கிள்ளி எறிய வேண்டும். நம் சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும். எனக்கு வயது 83 வயதாகிறது. என் வயதைத் தாண்டி திருமா நூறாண்டுகள். அரசியலில் நிலைத்து நின்று மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று பேசினார் பாரதிராஜா.
இதையும் படிங்க..2024 நாடாளுமன்ற தேர்தல்; அதிமுக - பாஜக கூட்டணி உறுதியா? அண்ணாமலை கொடுத்த ஷாக் அப்டேட் !!