உச்சநீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாக வரும்.. எடப்பாடி அரசியல் அனாதை ஆவார்.. சொல்வது யார் பாருங்க..
அரசியலில் எடப்பாடி பழனிச்சாமி தனியாளாக நிற்கத்தான் போகிறார் என்றும் அரசியலில் அவர் ஒரு அனாதை என்றும் பெங்களூரு புகழேந்தி விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது என்றும் சி.வி சண்முகம் செய்தியாளர்கள் மத்தியில் நாகரீகமாக பேச வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
அரசியலில் எடப்பாடி பழனிச்சாமி தனியாளாக நிற்கத்தான் போகிறார் என்றும் அரசியலில் அவர் ஒரு அனாதை என்றும் பெங்களூரு புகழேந்தி விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது என்றும் சி.வி சண்முகம் செய்தியாளர்கள் மத்தியில் நாகரீகமாக பேச வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே அதிகார போட்டி நிலவி வருகிறது. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் இது ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது,
இதையும் படியுங்கள்: எஸ்.பி வேலுமணிக்காக ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர்.! அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு.. நீதிமன்றத்தில் வாக்கு வாதம்
இதற்கிடையில் ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் புறநகர் மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்: தேசிய, மாநில விருதுகள் வாங்கிய மகிழ்ச்சியை விட..! இது தான் எனக்கு சந்தோஷம்- கவிஞர் வைரமுத்து
இச் சந்திப்புக்குப் பின்னர், ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழக போராட்ட வீரர் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவிக்க ஓபிஎஸ் நான்கு மணி நேரம் தாமதமாக சென்றார், அங்கு அவருக்கு ஆதரவாளர்கள் மாலை அணிவித்தனர், ஜெயக்குமாரை பார்த்தால் பாவமாகவும் பரிதாபமாக இருக்கிறது, செய்தியாளர் சந்திப்பில் அவர் மரியாதையாக பேச வேண்டும், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து உயிலை திருடி விட்டதாக சி.வி சண்முகம் நிதானமின்றி பேசிவருகிறார்.
அந்த உயிலை எடுத்துச் சென்ற எங்களது பெயரில் நாங்கள் மாற்ற முடியுமா? என கேள்வி எழுப்பினார்
சசிகலாவை சின்னம்மா என்று அழைக்க வேண்டாம், அம்மா என்று அழையுங்கள் என கூறியவர் சிவி சண்முகம்தான், இப்போது சி.வி சண்முகத்தை கேட்டால் ஓபிஎஸ்சை கேளுங்கள் என்கிறார், இவர்களின் துரோகத்திற்கு ஒரு அளவே இல்லையா? வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றால் நிச்சயம் அது எங்களுக்கு சாதகமாக தான் வரும், அப்போது எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் எந்தவித பதவியும் இல்லாத அனாதை ஆவர், பழனிச்சாமி அனாதையாக நிற்கப் போகிறார், அவர் எதிர்க்கட்சித் தலைவராக ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் இதுவரை மக்களுக்கு என்ன செய்தார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் ஓ. பன்னீர்செல்வத்திடம் கலந்தாலோசிக்காமல் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டார், அது மட்டுமின்றி அவர் சார்ந்த அமைச்சர்களும் நிறைய கொள்ளை அடித்து இருக்கிறார்கள், ஜனநாயக முறைப்படி கட்சி செயல்படவில்லை, விரைவில் எடப்பாடி பழனிசாமி அரசியலில் தனித்து விடப்படுவது உறுதி, பன்னீர்செல்வம் தலைமையில் பொதுக்குழு நடைபெறும் இவ்வாறு அவர் கூறினார்.