Asianet News TamilAsianet News Tamil

எஸ்.பி வேலுமணிக்காக ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர்.! அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு.. நீதிமன்றத்தில் வாக்கு வாதம்

மாநாகராட்சி டெண்டர் முறைகேட்டு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜரானதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

The Tamil Nadu government has objected to the appearance of the central government lawyer for SP Velumani
Author
First Published Sep 6, 2022, 11:12 AM IST

எஸ்.பி வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர்

 அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் மற்றும் திமுக குற்றம்சாட்டியிருந்தது. இதனையடுத்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், டெண்டர் முறைகேட்டு வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு ஏற்க்கதக்கதல்ல என கூறினார்.

இபிஎஸ் அரசியல் அனாதை...! ஓபிஎஸ் தலைமையில் விரைவில் அதிமுக பொதுக்குழு...! பெங்களூர் புகழேந்தி அதிரடி

The Tamil Nadu government has objected to the appearance of the central government lawyer for SP Velumani

தமிழக அரசு எதிர்ப்பு

மேலும் வேலுமணி சார்பில் மத்திய அரசு வழக்கறிஞர் ராஜு எப்படி ஆஜராக முடியும் என கேள்வி எழுப்பினார். முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ள நிலையில் வருமான வரித்துறைக்காக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ராஜு எப்படி வேலுமணிக்கு ஆதரவாக ஆஜராகலாம் என்று சண்முக சுந்தரம் வாதிட்டார். லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, வேலுமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதாக தெரிவித்தார். அப்போது வேலுமணி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு, மத்திய அரசின் அனுமதி பெற்றே வேலுமணிக்காக ஆஜராகி உள்ளதாக தெரிவித்தார்.

விநாயகரை இழிவுபடுத்திவிட்டார்...? முத்தரசனை கைது செய்திடுக..! இறங்கி அடிக்கும் பாஜக..

The Tamil Nadu government has objected to the appearance of the central government lawyer for SP Velumani

உள்நோக்கத்தோடு வழக்கு பதிவு

அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த பொதுநல வழக்குடன், ஆர்.எஸ்.பாரதி குற்றவியல் பிரிவில் தாக்கல் செய்த மனுவும் சேர்த்துதான் விசாரிக்கப்பட்டன. வழக்கை அமர்வு விசாரிக்கலாம். டெண்டர் முறைகேட்டில் எந்த வித ஆதாரமும் இல்லை என்ற ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை புறக்கணித்து விட்டு அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராஜூ தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை ரத்து செய்யக் கோரிய வேலுமணியின் மனுவை விசாரிக்க அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்ட கடும் ஆட்சேபங்கள் தொடர்பான உத்தரவை நீதிபதிகள் இன்று  ஒத்தி வைத்தனர்.
 

இதையும் படியுங்கள்

தேசிய, மாநில விருதுகள் வாங்கிய மகிழ்ச்சியை விட..! இது தான் எனக்கு சந்தோஷம்- கவிஞர் வைரமுத்து

Follow Us:
Download App:
  • android
  • ios