சட்டப்பேரவை நிகழ்வுகள்..! செல்போனில் படம் பிடித்த ஆளுநரின் விருந்தினர்- உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்த திமுக

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநரின் உரையின் போது, ஆளுநரின் விருந்தினர் தொலைபேசி மூலம் வீடியோ எடுத்ததாக திமுக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா உரிமை மீறல் கொண்டு வந்த நிலையில், அந்த பிரச்சனையை உரிமை மீறல் குழு ஆய்வு செய்ய சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

The issue of violation of rights has been brought against the Governor guest who recorded the proceedings of the Legislative Assembly with a cell phone

சட்டசபை கூட்டம்- செல்போனில் பதிவு

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையோடு நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த கூட்டத்தின் போது ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்றிருந்தார். அப்போது தமிழக அரசு ஒப்புதல் அளித்த வாக்கியத்தை மாற்றி தனது சொந்த வாக்கியங்களை பதிவு செய்திருந்தார். இதற்க்கு அதிமுக ஆளுநர் முன்னிலையிலேயை முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தார். இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து பாதியில் ஆளுநர் ரவி வெளியேறியிருந்தார். இந்தநிலையில் இந்த கூட்டத்தின் போது ஆளுநருடன் தமிழக சட்டமன்றத்திற்கு விருந்தினராக வந்திருந்த நபர் செல்போனில் சட்டசபை நிகழ்வுகளை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சனாதன தர்மம் தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்கியது-ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு

The issue of violation of rights has been brought against the Governor guest who recorded the proceedings of the Legislative Assembly with a cell phone

உரிமை மீறல் பிரச்சனை எழுப்பிய திமுக

தமிழக சட்டமன்றத்திற்குள் வீடியோ எடுக்க கூடாது என்றது அவை மரபாகும், அதனையும் மீறி செல்போனில் வீடியோ எடுத்தது தொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா உரிமை மீறல் பிரச்சனையை எழுப்பினார்.  ஆளுநர் உரையின் போது சபை மாடத்தில் இருந்து அவர் செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிவித்தார்.  அவரது கோரிக்கையை ஏற்ற சபாநாயகர் உரிமை மீறலுக்கான காரணம் இருப்பதால், தீர்மானத்தை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக சபாநாயகர் உத்தரவிட்டார்.

The issue of violation of rights has been brought against the Governor guest who recorded the proceedings of the Legislative Assembly with a cell phone

அதிரடி உத்தரவிட்ட சபாநாயகர்

மேலும்  நேற்று முன் தினம் எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை ஒரு போதும் ஆளுநர் பேசும் போது அவருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவை உறுப்பினர்கள் நடக்கக் கூடாது என கேட்டுக்கொண்டார். மேலும்  இனி வரும் காலங்களில் ஆளுநர் இருக்கையில் இருக்கும் போது சட்ட மன்ற உறுப்பினர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம்..! எடப்பாடி புகாருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்..! வெளிநடப்பு செய்த அதிமுக

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios