சனாதன தர்மம் தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்கியது-ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு

இந்திய நாடு வலிமைமிக்க ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகள், முனிவர்களால் உருவாக்கப்பட்டதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Governor RN Ravi said that Sanatana Dharma started from Tamil Nadu

தியாகராஜ ஆராதனை விழா

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில்  தியாகராஜர் சமாதியில் ஆளு காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சத்குரு தியாகராஜரின் சமாதி வளாகத்தில், தியாகராஜர் மறைந்த புஷ்ய பகுல பஞ்சமி திதியில் 'ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபை' சார்பில், ஆண்டுதோறும் இசை ஆராதனை விழா நடத்தப்படுகிறது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 176வது ஆராதனை விழா இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில்  இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்றுள்ளதால் அவருக்காக தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது.

ஆளுநருக்கு எதிராக நேரடியாக களத்தில் இறங்கும் திமுக..! ஆர்.என்.ரவியை மாற்ற டி.ஆர் பாலு தலைமையில் புதிய திட்டம்

Governor RN Ravi said that Sanatana Dharma started from Tamil Nadu

விஸ்வகுருவாக இந்தியா

இந்த நிகழ்ச்சியில்பேசிய ஆளுநர் ரவி, கடந்த ஆண்டுகளில் இந்தியாவை உலக நாடுகள் மூன்றாம் தர நாடாக பார்த்த நிலையில், தற்போது இந்தியாவை முன்னணி நாடாக வியந்து பார்க்கின்றனர். பொருளாதாரம், ராணுவம், ஆன்மீகத்தில் இந்தியா வலிமையாக இருக்கிறது என்றார். பயங்கரவாதம் உள்ளிட்டவற்றில் இருந்து மக்களை காக்க உலகத்திற்கு இந்தியா ஒளியாக இருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளில் உலக நாடுகளில் இந்தியா முதன்மை நாடாகவும், தலைமை வகிக்கும் நாடாகவும் திகழும் என கூறினார்.  உலகத்தின் விஸ்வகுருவாக இந்தியா விளங்குகிறது என தெரிவித்தார். 

Governor RN Ravi said that Sanatana Dharma started from Tamil Nadu

முனிவர்,ரிஷிக்களால் உருவாக்கப்பட்டது

இந்திய நாடு வலிமைமிக்க ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகள், முனிவர்களால் உருவாக்கப்பட்டது. நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்பதே பாரதம். சனாதன தர்மத்தால் மட்டுமே இது சாத்தியமானது என்றார். இந்தியாவின் கலாச்சார அடையாளம் ராமர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்களை ராமர் ஆன்மீகத்தால் இணைத்துள்ளார்.  உங்களில் என்னையும், என்னில் உங்களையும் காண்பது தான் சனாதன தர்மம். சனாதன தர்மம் என்பது தெற்கிலிருந்து தான் துவங்கியது. அதுவும் குறிப்பாக, தமிழகத்தில் இருந்து தான் துவங்கியது  என்று குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கியதற்கு எதிர்ப்பு.!சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்து கெத்து காட்டும் அதிமுக
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios