டிடிவி அணியில் இணைந்தாரா ஓபிஎஸ் ஆதரவாளர்...? அதிர்ச்சி அடைந்த அதிமுக...சையது கான் கூறிய புதிய விளக்கம்
தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த டிடிவி தினகரனை, அதிமுக தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான சையது கான் வரவேற்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவும்- அதிகார மோதலும்
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சராக பொறுப்பு வகித்து வந்த ஓ.பன்னீர் செல்வம் பதவியை விட்டு விலக வைத்து சசிகலா முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டது. இதன் காரணமாக அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் விலகி தர்ம யுத்தம் நடத்தியது. அப்போது சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்ததால் எடப்பாடியிடம் முதலமைச்சர் பதவியை கொடுத்து விட்டு சசிகலா சிறைக்கு சென்றது. இதனையடுத்து சசிகலா அணியினரை விலக்கிவிட்டு ஓபிஎஸ் அணியை இபிஎஸ் அணி சேர்த்தது. அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. இதனையடுத்து அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற முழக்கம் எழுந்த நிலையில் யார் அந்த ஒற்றை தலைமை போட்டியானது அதிமுகவில் உருவானது. இப்படி தொடர் பிரச்சனைகளுக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்காத நிலைதான் உருவாகியுள்ளது.
நீங்க யார் பக்கம்? எடப்பாடி Vs ஓபிஎஸ்.. சசிகலா சொன்ன அந்த பேர்.. அதிர்ச்சியில் நிர்வாகிகள் !
ஒற்றை தலைமை போட்டி
இந்தநிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை தேனி மாவட்டத்தில் இருந்து உருவானது, ஆனால் அந்த ஒற்றை தலைமை சசிகலா என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தேனி மாவட்ட செயலாளர் சையது கான், ஓ.பன்னீர் செல்வத்திடம் கொடுத்தார். இந்த தீர்மானத்தால் அலர்ட் ஆன இபிஎஸ் அணி முந்திக்கொண்டு ஒற்றை தலைமை எடப்பாடி பழனிசாமி என கூறியது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழுவில் ஒற்றை தலைமையாக அதாவது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்தெடுக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இந்தநிலையில் கடந்த வாரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர் இல்ல மறைவு நிகழ்ச்சிக்கு மதுரை சென்ற அதிமுக தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ் நம்பிக்கைக்குரியவராக இருப்பவருமான சையது கான் டிடிவி தினகரனை சந்தித்து பேசினார். இதனையடுத்து நேற்று தேனிக்கு வந்த டிடிவி தினகரனை, சையது கான் தலைமையிலான ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலை தளத்தில் பரவியது.
“எல்லாமே கட்டுக்கதை..எதுவுமே செல்லாது” பற்ற வைத்த பண்ருட்டி ராமசந்திரன்.. சசிகலா ரிட்டர்ன்ஸ் !
டிடிவியை வரவேற்ற ஓபிஎஸ் ஆதரவாளர்
இதனால் ஓபிஎஸ் ஆதரவாளராக இருக்க கூடிய சையது கான், டிடிவியை சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்து விட்டதாக கூறப்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்திருந்தனர். இந்தநிலையில், இது தொடர்பாக நேற்று விளக்கம் அளித்த சையது கான், எனது இறுதி மூச்சு உள்ளவரை அஇஅதிமுக எனும் மாபெரும் இயக்கத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வழியில் எனது கழக பணிகள் தொடரும் என தெரிவித்துள்ளார்.