40 கோடிக்காக மனைவியை கொன்ற டாக்டர்... கள்ளக் காதலிக்கு போன் போட்டு சொன்ன பயங்கரம்.
40 கோடி ரூபாய் காப்பீடு தொகைக்காக மனைவியை கணவன் கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. சிறுத்தை வேட்டைக்கு செல்வதாக காட்டுக்குள் அழைத்துச் சென்று டாக்டர் கணவர் இந்த கோடூரத்தில் ஈடுபட்டுள்ளார். இச் சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
40 கோடி ரூபாய் காப்பீடு தொகைக்காக மனைவியை கணவன் கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. சிறுத்தை வேட்டைக்கு செல்வதாக காட்டுக்குள் அழைத்துச் சென்று டாக்டர் கணவர் இந்த கோடூரத்தில் ஈடுபட்டுள்ளார். 7 ஆண்டுகள் கழித்து இச் சம்பவம் அமெரிக்காவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர் பல் மருத்துவர் லாரன்ஸ் லாரி ருடால்ப், இவரது மனைவி பியான்கா ருடால்ப், கணவர் லாரன்ஸ் ருடால்ப் வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் மனைவி மீது 40 கோடி ரூபாய் அதாவது 4.2 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான காப்பீடு இருந்துவந்தது.
இதையும் படியுங்கள்: விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் துடிதுடிக்க வெட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு.!
இந்நிலையில்தான் மனைவியை தீர்த்துக் கட்டிவிட்டு காதலியுடன் சேர்ந்து வாழ லாரன்ஸ் லாரி ருடால்ப் முடிவு செய்தார். இதே நேரத்தில் காதலியும் மனைவியை விவாகரத்து செய்து விட்டு வருமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ருடால்ப் வழக்கமாக சஃபாரியில் ஆப்பிரிக்க சிறுத்தைகளை வேட்டையாடுவதை தனது பொழுதுபோக்காக வைத்திருந்தார்.
எனவே கடந்த 2016 ஆம் ஆண்டு ஜாம்பியாவில் மனைவியை சிறுத்தை வேட்டைக்கு அழைத்துச் சென்று அவர், அவரை நடு காட்டில் வைத்து சுட்டு படுகொலை செய்துள்ளார். பின்னர் மனைவி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் போலீசிடம் கூறினார். இந்நிலையில் அவர் மீது போலீசார் (FBI) விசாரணை நடைபெற்று வந்தது. 2020 -இல் இருந்து இந்த விசாரணை நடந்து வந்தது.
முன்னதாக தனது மனைவியை கொலை செய்த கையோடு தனது காதலி லோரி மில்லிரோனிடம் அவர் உனக்காக மனைவியை கொலை செய்து விட்டதாக அப்போது கூறியுள்ளார். மேலும் மனைவி தற்கொலை செய்து கொண்டார் என காப்பீட்டு நிறுவனத்தை நம்பவைத்து அந்நிறுவனதிடமிருந்து சுமார் 40 கோடி ரூபாய் காப்பீட்டு தொகையை அவர் பெற்றார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வந்த நிலையில், தனது மனைவியை 67 வயதான லாரன்ஸ் ருடால்ப் சுட்டுக் கொலை செய்தது வெளிச்சந்திற்கு வந்துள்ளது. ஆனால் இதுநாள் வரை அவரும் அவரது காதலியும் அதை மூடி மறைத்து அது ஒரு தற்கொலை என நாடகம் ஆடி வந்ததும் தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்கள்: டிவியில் பார்த்த நிகழ்ச்சி.. சிறுவனை கடத்திய சிறுவர்கள்..போலீசார் ஷாக்.!
தற்போது இந்த வழக்கில் அவர்கள் கொலை செய்தது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது, ஆதாரங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ருடால்ப் தனது மனைவி பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 1982 இவர்களது திருமணம் நடந்தது குறிப்பிடதக்கது.