Asianet News TamilAsianet News Tamil

தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதா..? சேது சமுத்திரம் திட்டத்தை செயல்படுத்திடுக- ஸ்டாலின் தனித்தீர்மானம்

ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம் என்று ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார்.இப்படி ஒன்றிய அரசு தெரிவித்துள்ள நிலையில் சேது சமுத்திரத்திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே இருப்பதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

The Chief Minister will bring a separate resolution in the Legislative Assembly demanding the implementation of the Setu Samutram project
Author
First Published Jan 12, 2023, 8:16 AM IST

தனித்தீர்மானம் கொண்டு வரும் ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையின் மூன்றாம் நாள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு வளர்ச்சி அடைய சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானத்தை முன்மொழியவுள்ளார். அந்த தீர்மானத்தில்,  "தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெறச் செய்வதற்கு மிக இன்றியமையாத திட்டமாக சேதுசமுத்திரத் திட்டம் விளங்கி வருகின்றது. 1860-ஆம் ஆண்டு 50 லட்சம் ரூபாயில் Commander Taylor என்பவரால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது பிரதமராக இருந்த மாண்புமிகு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் "Feasibility Study"-க்கு அனுமதியளித்தார்கள். அப்போதுதான் சேதுசமுத்திரத் திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப்பட்டது. 

ஆளுநர் சரியாக தான் நடந்து கொண்டார்.. எல்லாமே பொய்.! உண்மையை உடைக்கும் அண்ணாமலை

The Chief Minister will bring a separate resolution in the Legislative Assembly demanding the implementation of the Setu Samutram project

சேது சமுத்திர திட்டம் துவக்கம்

பின்னர் ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசின் பிரதமரான டாக்டர் மன்மோகன்சிங் அவர்களால் 2004-ஆம் ஆண்டு 2,427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும்,ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவராக இருந்த அன்னை சோனியா காந்தி அவர்களும் முன்னிலை வகிக்க இத்திட்டத்தை பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் 2.7.2005 அன்று துவக்கி வைத்தார்கள். திட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தலைநிமிர வைக்கும் இத்திட்டத்துக்கு, 

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு... தீர்ப்பை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!!

The Chief Minister will bring a separate resolution in the Legislative Assembly demanding the implementation of the Setu Samutram project

கடல் பகுதியில் கட்டுமானம் என்ன.?

குறிப்பாக தென் மாவட்டங்களை செழிக்க வைக்கும் இத்திட்டத்துக்கு, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும்  இந்த சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. எந்தக் காரணத்தைக் கூறி முட்டுக்கட்டை போடப்பட்டதோ அதையே நிராகரிக்கும் வகையில் தற்போது "ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம்" என்று ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார். இப்படி ஒன்றிய அரசு தெரிவித்துள்ள நிலையில் சேது சமுத்திரத்திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே - கருதி இந்த மன்றம் கவலை தெரிவிக்கிறது. 

The Chief Minister will bring a separate resolution in the Legislative Assembly demanding the implementation of the Setu Samutram project

சேது சமுத்திரம் - செயல்படுத்திடுக

இனியும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தவிடாமல் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம் கருதுகிறது. எனவே, மேலும் தாமதமின்றி இந்த முக்கியமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட, ஒன்றிய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்றும், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் என்றும் இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது என அந்த தனித்தீர்மானத்தில் உள்ளது. இந்த தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டு வரவுள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்

திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை சொன்னீங்க.. அப்படியானால் எல்லாமே செட்டிங்கா முதல்வரே? மநீம

 

Follow Us:
Download App:
  • android
  • ios