அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு... தீர்ப்பை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!!
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் கடந்த ஐந்து நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பும் தங்களது வாதங்களை நிறைவு செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இதையும் படிங்க: குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு.. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்.!
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, எடப்பாடி பழனிசாமி கட்சி விதிகளுக்கு மாறாக, கட்சியின் அடிப்படை விதிகளுக்கு மாறாக குறுக்கு வழியில் ஒற்றை தலைமையை கைப்பற்ற நினைப்பதாக வாதிட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பு, கட்சியின் விதிகளின்படியே பொதுக்குழு கூட்டம் கூட்டபட்டது. பொதுக்குழுவுக்கு உச்சபச்ச அதிகாரம் உள்ளது. இரட்டை தலைமையால் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் பொதுக்குழு ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் செய்யணும்.. ஆளுநருக்கு பாதுகாப்பே இல்லை! இவரே இப்படி சொல்லிட்டாரு.!!
அப்படிப்பட்ட பொதுக்குழுவின் 94 சதவீத உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தெர்வு செய்தனர். எனவே அவரைத் தேர்வு செய்தது செல்லும் என வாதிட்டது. செயற்குழு தரப்பு, பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளனர் என்று தெரிவித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.