அண்ணாமலை பேசிய ஆடியோவை திரித்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என் மதுரை மாவட்ட பாஜகவினர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். 

மிஸ்டு கால் கொடுத்த சரவணன்

மதுரையில் ராணுவ வீரர் உடலுக்கு தமிழக அரசு சார்பாக நிதி அமைச்சர் அஞ்சலி செலுத்தப்பட்ட போது பாஜகவினருக்கும்- அமைச்சருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு சம்பவம் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த பிரச்சனையை அரசியல் ஆக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது போல் ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆடியோ தொடர்பாக மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரன் மதுரை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கடந்த 13.08.2022ம் தேதி இராணுவ வீரர் லெட்சுமணன் அவர்கள் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாநில தலைவர் அவர்கள் திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக காலை 11.30 மணி அளவில் மதுரை ரிங்ரோடு வரும் போது நான் அவரை வரவேற்றேன்.

என்னை அவர்கள் காரில் ஏற்றிக்கொண்டு மதுரை விமானநிலையம் நோக்கி சென்றோம். காரில் மாநில தலைவரின் பி.ஏ பிரபா மற்றும் இரண்டு காவல் அதிகாரிகள் இருந்தனர். கார் ரிங்ரோட்டில் சென்று கொண்டிருக்கும்போது டாக்டர் சரவணன் தனது போனில் இருந்து மாநில தலைவர் போனிற்கு மிஸ்டு கால் கொடுத்தார். மாநில தலைவர் அவர்கள் தனது பி.ஏ போன் 824898***** இருந்து டாக்டர் சரவணன் அவர்களுக்கு போன் செய்து என்ன விபரம் என்று கேட்க சொன்னார். 

அதிமுக திட்டத்திற்கு மூடுவிழா.. அதிரடியாக களமிறக்கிய CV.சண்முகம்.. திண்டிவனத்தில் நடக்க போகும் தரமான சம்பவம்.

அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை

அதன்படி Open Mike போட்டு மாநில தலைவர் பேசும்போது டாக்டர் சரவணன் அவர்கள் தானும் கட்சி நிர்வாகிகளும் மதுரை விமான நிலையம் வந்துவிட்டோம் இங்கு வந்த அமைச்சர் PTR தியாகராஜன் அவர்கள் என்னை நோக்கியும், பொதுமக்களை பார்த்தும் உங்களை யார் அனுமதித்தது வெளியே போங்க என்று சொன்னவுடன் எங்கள் மாநில தலைவர் வருகிறார் என்று சொல்லியதற்கும் அமைச்சர் அவர்கள் அவருக்கு யார் அனுமதி கொடுத்தது அனுமதி கிடையாது என்று கூறுகிறார் என்றார். அதற்கு மாநில தலைவர்கள் அவர்கள் அப்படினா நீங்களே அஞ்சலி செலுத்துங்கனா என்றும் அமைச்சருக்கு நிகரா மாவட்ட தலைவர் அஞ்சலி செலுத்தியாக இருக்கட்டும் என்று கூறிவிட்டு போனை ஆப் செய்யாமல் என்னிடம் புறநகருக்கு சென்றுவிடுவோம் லெட்சுமணன் அவர்கள் வீடு எத்தனை கிலோ மீட்டர் என்று கேட்டார். நான் 12 கிலோ மீட்டர் என்று கூறினேன் அப்ப கட்சி ஆட்கள் எத்தனைபேர் இருக்கிறார், என்ன ஏற்பாடு என்று கேட்டார்.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க இது செய்தால் போதும்.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு !

வேற லெவல் அரசியல் பண்ணுவோம்

நான் செல்லும் வழியில் லெட்சுமணன் அவர்கள் பிளக்ஸ் வைத்து மலர் அஞ்சலி செலுத்த 500க்கு மேற்பட்டு இருக்கிறார்கள் என்றேன். உடனே போனில் இருந்த டாக்டர் சரவணன் அவர்கள் வேண்டாம் அண்ணா நான் அனுமதி வாங்கிவிட்டேன். அரசு மரியாதை செலுத்திவிட்டார்கள் நீங்கள் இங்கு வந்தவுடன் அஞ்சலி செலுத்திவிட்டு சென்றுவிடலாம் என்று அழைத்தார்கள். அதற்கு மாநில தலைவர்கள் அவர்கள் அமைச்சர் தியாகராஜன் அவர்கள் உண்மை தன்மையை பொதுமக்களிடம் எடுத்துகூறி அவரது பொய்யான முகத்திரை காட்டி வேறுலெவல் அரசியல் பண்ணுவோம் என்று கூறினார். அதனையும் மீறி வரச்சொன்னவுடன் மாநில தலைவரும் நானும் விமானநிலையம் சென்று அஞ்சலி செலுத்தினோம். வெளியே என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியாது வெளியே நாங்கள் வரும்போது எதுவும் நடக்கல நான் மாநில தலைவர் அவர்களை சிவகங்கைக்கு வழி அனுப்பிவிட்டு வந்துவிட்டேன். எந்த ஒரு இடத்திலும் நானும் மாநில தலைவரும் போனில் உரையாடவில்லை நான் அவருடன் கூடச்செல்லும்போது போனில் பேசியதாக சொல்லுவது உண்மைக்கு முறணானது என கூறியுள்ளார். 

தமிழ் மொழி, பண்பாடு தெரியலன்னா வாய்மூடி அமைதியா இருங்க.. ஆளுநர் ஆர்.என் ரவியை பங்கம் செய்த பழ. நெடுமாறன்.

டாக்டர் சரவணன் தான் காரணம்

ஆகவே பாரதிய ஜனதா கட்சி மூலம் மக்கள் பணி செய்து மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தையும் கடைக்கோடி ஏழை எளிய மக்களுக்கு சென்றடையும் வண்ணம் உழைத்து கொண்டிருக்கும் தலைவர்களை அசிங்கப்படுத்தி அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில் வேண்டும் என்றே மேற்படி உரையாடலை திரித்து கட்டிங் செய்தும் டப்பிங் மிமிக்ரி எடிட்டிங் செய்தும் டிவிட்டர், பேஸ்புக், யுடிப் ஆகியவற்றில் பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி கலவரம் ஏற்படுத்த எத்தணித்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனது போன் எண். 93444*****. மாநில தலைவர் பி.ஏ பிரபா போன்: 8248***** மற்றும் டாக்டர் சரவணன் போன்: 98421***** ஆகியவற்றையும் டாக்டர் சரவணன் போன் நம்பரை முழுமையாக ஆராய்ந்து உண்மையான விசாரணை செய்தால் உண்மை வெளிவரும். டாக்டர் சரவணன் அவர்கள் வேண்டுமென்றெ திட்டமிட்டு சதி செய்து அவரது ஆட்களோடு சேர்ந்து இணையதளத்தில் வீடியோ மற்றும் ஆடியோவாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

ஆகவே மேற்படி இணையதள குற்றச்செயலை செய்த டாக்டர் சரவணன் மீதும் இதில் தொடர்புடைய அவரது ஆட்கள் மற்றும் இணையதளத்தில் பரப்பியவர்கள் குற்றசதி செய்தவர்களை கண்டுபிடித்து தகுந்த சட்டநடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.