அதிமுகவில் இணைந்தேனா..? அண்ணாமலைக்கு ஆதரவாக திடீரென பல்டி அடித்த பாஜக ஐடி பிரிவு நிர்வாகி
சென்னை மேற்கு மாவட்ட ஐடி பிரிவு துணை தலைவர்கள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து இருப்பதாக வெளியான தகவலுக்கு ஐடி பிரிவு நிர்வாகி கே.ஆர்.சரவணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதிமுக- பாஜக மோதல்
அதிமுக- பாஜக இடையே கடந்த சில நாட்களாக கருத்து மோதல் அதிகரித்துள்ளது. அதிமுகவினரை பாஜகவினரும், பாஜகவினரை அதிமுகவினரும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில் பாஜக ஐடி பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து ஐடி பிரிவு செயலாளரும் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வலது கரமாக செயல்படும் அமர் பிரசாத் ரெட்டி அதிமுகவை விமர்சித்து இருந்தார். அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், அதிமுக கூட்டணியில் இருக்கும்போது இப்படி செய்திருக்க கூடாது. பாஜகவில் இருந்து விலகுபவர்களை அதிமுக அரவணைக்க கூடாது. தமிழ்நாட்டின் வருங்காலம் பாஜகதான். அண்ணாமலை தலைமையில் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுகவில் இணைகிறேனா..? திருமாவளவன் அதிரடி பதில்
அதிமுகவிற்கு தாவும் பாஜக நிர்வாகி
மேலும் கொங்கு மண்டலத்தில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வி அடைந்ததையும் கூறி விமர்சித்தார். இதற்க்கு அதிமுக நிர்வாகிகளும் பதிலடி கொடுத்தனர். இந்தநிலையில் நேற்று சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் 13 பேர் கூண்டோடு கட்சியில் இருந்து விலகி உள்ளதாக அறிக்கை ஒன்று வெளியானது. அதில் துணை தலைவர்கள் ஆர்.கே.சரவணன், ராமபுரம் ஶ்ரீராம் ஆகியோர் உட்பட 10 மாவட்ட செயலாளர்கள் விலகி இருப்பதாக அந்த அறிக்கையில் கையெழுத்திட்டு வெளியிடப்பட்டிருந்தது. இந்த தகவலால் பாஜகவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் சென்னை மேற்கு மாவட்ட ஐடி பிரிவு துணை தலைவர் ஆர்.கே.சரவணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் பாஜகவில் இருந்து விலகவில்லையென தெரிவித்துள்ளார்.
பல்டி அடித்த பாஜக நிர்வாகி
மேலும் அவர் கூறுகையில் எங்கள் மாவட்ட தலைவர் ஒரத்தை அன்பரசு என்னை தொடர்பு கொண்டு 5 நிமிடங்கள் வர சொன்னார். அங்கு சென்ற பிறகு என்னை கட்டாயப்படுத்தி கையெழுத்து போட வைத்தார்கள்.
இதனையடுத்து சமூக வலை தளத்தில் அந்த அறிக்கையை பரப்பி உள்ளனர். தற்போதும் நான் பாஜகவில் தான் உள்ளேன். அண்ணாமலை கூட பயணிக்கவே விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதேபோல 10 மாவட்ட செயலாளர்கள் விலகவில்லையெனவும் பாஜக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்