இப்போ அடுத்த 13 பேர் எஸ்கேப்.! கட்சி தாவும் நிர்வாகிகள்.. காலியாகும் பாஜக கூடாரம் - அப்செட்டில் அண்ணாமலை
பாஜக சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகி உள்ளனர். அடுத்தடுத்து பாஜகவினர் ராஜினாமா செய்து வருவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு பாஜகவின் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்தவர் சிடிஆர் நிர்மல் குமார். திடீரென்று கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன்” என்று குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதேபோல பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன், தனது பேஸ்புக் பக்கத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார்கள் அடுக்கினார். அவர் வெளியிட்ட பதிவில், இத்தனை காலம் என்னோடு பயணித்த பாஜக ஆதரவாளர்கள், பாஜக நண்பர்கள், பாஜக அனுதாபிகள் அனைவருக்கும் மிக்க நன்றி. கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன் என்று பதிவிட்டார். குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க..Kushboo: 8 வயதில் பாலியல் தொல்லை கொடுத்தார் என் தந்தை.. நடிகை குஷ்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று (மார்ச் 07) அதிமுகவில் இணைந்தார். அப்போது, சிடிஆர் நிர்மல்குமாரும் உடன் இருந்தார். இந்த நிலையில், சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் 13 பேர் கூண்டோடு கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.
பாஜக சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகியுள்ளது பெரும் பின்னடைவாக உள்ளது. இது பாஜகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தடுத்து ராஜினாமா செய்வதால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது.
இதையும் படிங்க..பிக் பாஸ் நட்சத்திரத்துக்கு ‘அந்த’ தொல்லை கொடுத்த பிரியங்கா காந்தியின் பிஏ.. வைரலாகும் வீடியோ !!