பிக் பாஸ் நட்சத்திரத்துக்கு ‘அந்த’ தொல்லை கொடுத்த பிரியங்கா காந்தியின் பிஏ.. வைரலாகும் வீடியோ !!
பிக் பாஸ் புகழ் அர்ச்சானா கவுதமின் தந்தை காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் பிஏ மீது புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் -16 இன் முதல் 5 இறுதிப் போட்டியாளரான அர்ச்சனா கவுதமின் தந்தை காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் (பிஏ) தனி செயலாளரான சந்தீப் குமார் மீது புகார் அளித்துள்ளார்.
பார்ட்டபூர் காவல் நிலையத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார் அர்ச்சனா கவுதமின் தந்தை. அதன்படி, சாதி வார்த்தை சொல்லி திட்டியுள்ளார் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அர்ச்சனா கவு தம் பேஸ்புக் லைவில் கூறி உறுதிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க..Kushboo: 8 வயதில் பாலியல் தொல்லை கொடுத்தார் என் தந்தை.. நடிகை குஷ்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்
504, 506 மற்றும் எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் பார்ட்டபூர் காவல் நிலையத்தில் சந்தீப் சிங் மீது வழக்கை பதிவு செய்து மீரட் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அந்த புகாரில், பிரியங்கா காந்தியின் அழைப்பின் பேரில் காங்கிரஸ் பொது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தனது மகள் 2023 பிப்ரவரி 26 அன்று சத்தீஸ்கரின் ராய்ப்பூருக்குச் சென்றார்.
தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியைச் சந்திக்க தனது மகள் அவரின் பிஏவான சந்தீப் சிங்கிடமிருந்து பேசியுள்ளார். ஆனால், அவர் அவளை பிரியங்கா காந்திக்கு அறிமுகப்படுத்த மறுத்துவிட்டார். அர்ச்சனாவுடன் பேசும் போது அவர் சாதி பெயரையும், அநாகரீகமான சொற்களையும் பயன்படுத்தினார்.
இதைத் தவிர, அவர் கொலை செய்வதாகவும் மிரட்டினார் என்று அர்ச்சனா கவுதமி தந்தை குற்றம் சாட்டினார். இந்த புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று எஸ்.பி. மீரட் கூறியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜாலியாக ஹோலி கொண்டாடிய சினிமா நட்சத்திரங்கள்... இணையத்தை கலக்கும் கலர்ஃபுல் போட்டோஸ் இதோ