அதிமுக கட்சி தலைமையும், ஆட்சியும் தனித்தனியாக இருப்பது ஏற்யுடையது அல்ல. கட்சி தலைமையும் ஆட்சி அதிகாரமும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அதிமுகவினர் அதையே விரும்புகின்றனர். தொண்டர்களின் மனநிலையை ஏற்று ச்சிகலா முதல்வராக வேண்டும் என மக்களவை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

இதுகுறித்து தம்பிதுரை கூறியதாவது, ஜெயலலிதாவின் நிழலாக உடனிருந்த சசிகலா அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரின் வேண்டுகோளையும் ஏற்று பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் கட்சியின் பொதுச் செயலராகப் பொறுப்பேற்று கொண்டார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை போல, தொண்டர்களை கட்டி காக்கும் உன்னதமான பொறுப்பை சசிகலா ஏற்றுள்ளார். அதிமுகவினர் பாதுகாப்பாக இருப்பதாக உணரும் வகையில் சிறந்த உரையை சசிகலா ஆற்றியுள்ளார். அவரது தலைமையின் கீழ் அதிமுக மேலும் சிறப்பான வளர்ச்சியடையும். தமிழகத்துக்கும் சசிகலா பாதுகாப்பாக இருப்பார்.

சசிகலா, விரைவில் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். அதை ஏற்று விரைவில் அவர் முதல்வராக மக்கள் பணியாற்றுவார் என்றார்.