தேசிய கட்சி தொடங்குகிறாரா சந்திரசேகர்ராவ்? தேசிய அரசியலில் உச்சகட்ட பரபரப்பு!!
ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவராக இருக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் விரைவில் தேசிய கட்சியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவராக இருக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் விரைவில் தேசிய கட்சியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தெலுங்கானா இயக்கம் தொடங்குவதற்கு முன்பு நாங்கள் செய்ததைப் போன்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிவுஜீவிகள், பொருளாதார வல்லுனர்கள் மற்றும் நிபுணர்களுடன் நீண்ட நேர ஆலோசனைக்கு பிறகு மாற்று தேசிய நிகழ்ச்சி நிரலில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. இதனால், மிக விரைவில் தேசிய கட்சியை உருவாக்குவதும், அதன் கொள்கைகளை உருவாக்குவதும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆளுநர் சர்ச்சை பேச்சை கண்டித்து போராட்டம்… 75க்கும் மேற்பட்டோர் கைது!!
இதனால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா உருவாவதற்கு மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்து, பின்னர் அந்த மாநிலத்தின் முதல்வராகவும் பொறுப்பு வகித்து வரும் சந்திரசேகர் ராவ் தென்னிந்தியாவில் பிரதமர் மோடியை மிகவும் வலுவாக எதிர்த்து வரும் தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் 2019 தேர்தலுக்கு முன்பே மம்தா பானர்ஜி, தேவகவுடா, அகிலேஷ் யாதவ், ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக், ஸ்டாலின் ஆகியோர சந்தித்தார். ஆனால், அப்போது அவரால் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
இதையும் படிங்க: அதிமுகவில் இணையும் அன்வர் ராஜா.. யார் அணியில் இணையப்போகிறார் தெரியுமா ? எடப்பாடியா? பன்னீரா?
இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே பிரதமர் மோடியையும், பாஜகவையும் மிக கடுமையாக விமர்சித்து வரும் இவர், பிரதமர் மோடியை சந்திப்பதையும் தவிர்த்தார். இதனிடையே தேசிய கட்சி அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் நான்கும் மேற்பட்ட மாநிலங்களில் சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களில் குறைந்தது 6 சதவீதம் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதால் சந்திரசேகர் ராவ் எதிர்வரும் குஜராத், கர்நாடகா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் உத்தரபிரதேச தேர்தல்களில் கவனத்தை செலுத்த உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.