டிடிவி.தினகரனின் வலது கரத்தை தட்டித்தூக்கிய இபிஎஸ்... காலியாகும் அமமுகவின் கூடாராம்
டிடிவி தினகரன் அணியின் முக்கிய நிர்வாகியும், தஞ்சை மாவட்ட செயலாளருமான ம.சேகரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து டிடிவி தினகரன் நீக்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் அதிகார மோதல்
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் அதிக வாங்கு வங்கி உள்ள அதிமுக தேர்தலில் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிமுகவை பலப்படுத்தும் வகையில் பிரிந்து சென்ற நிர்வாகிகளை தங்கள் அணிக்கும் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அணி நிர்வாகிகளை தங்கள் அணிக்கு இணைந்த எடப்பாடி பழனிசாமி. தற்போது டிடிவி தினகரனின் வலது கரமாக பார்க்கப்படும் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் ம.சேகரை அதிமுகவிற்கு இழுத்துள்ளார்.
மன்னிப்பு கேள்..! இல்லைனா 100 கோடி நஷ்ட ஈடு கொடு- அண்ணாமலைக்கு எதிராக இறங்கி அடிக்கும் டிஆர் பாலு
காலியாகும் டிடிவி அணி
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் அமமுக வெற்றிபெற்ற ஒரே பேரூராட்சி ஒரத்தநாடு மட்டுமே. பேரூராட்சி தலைவராக இருப்பவர் மா.சேகர், தஞ்சை மாவட்டத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகியாக இருந்த வைத்தியலிங்கம் ஓபிஎஸ் அணியில் இருப்பதாகல் அவருக்கு எதிராக அரசியல் செய்ய மா.சேகர் சரியாக இருப்பார் என்ற காரணத்தால் எடப்பாடி அணிக்கு அவரை இழுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்றோ அல்லது நாளையோ மா.சேகர் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொள்வார் என கூறப்படுகிறது. இதனிடையே இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும்,
கட்சியில் இருந்து நீக்கிய டிடிவி
கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் M.சேகர் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்றுமுதல் நீக்கி வைக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார். மேலும் கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத்தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனை, தொடர்ந்து வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக, M.ரெங்கசாமி அவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்