மன்னிப்பு கேள்..! இல்லைனா 100 கோடி நஷ்ட ஈடு கொடு- அண்ணாமலைக்கு எதிராக இறங்கி அடிக்கும் டிஆர் பாலு

திமுக தலைவர்கள் தொடர்பாக ஊழல் மற்றும் சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை மீது உதயநிதி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வழக்கிறஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலுவும் 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
 

TR Balu has sent a notice to Annamalai demanding Rs 100 crore compensation

திமுக- பாஜக மோதல்

திமுக- பாஜக இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. திமுக ஆட்சி அமைந்ததும் மின்வாரியத்தில் டெண்டர் வழங்கியதில் முறைகேடு, மக்கள் நல்வாழ்வுத்துறையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கியதில் முறைகேடு, பத்திர பதிவில் முறைகேடு என அடுத்தடுத்து திமுக அமைச்சர்கள் மீது புகார்களை அண்ணாமலை தெரிவித்து வந்தார்.  தமிழக ஆளுநரிடமும் புகார் பட்டியலை கொடுத்திருந்தார். இந்தநிலையில் திமுக நிர்வாகிகளான ஜெகத்ரட்சகனுக்கு ரூ.50,219.37 கோடி, எ.வ.வேலுவுக்கு ரூ.5,552.39 கோடி, கே.என்.நேருவுக்கு ரூ.2,495.14 கோடி, கனிமொழிக்கு ரூ.830.33 கோடி, கலாநிதி மாறனுக்கு ரூ.12,450 கோடி, மேலும் டிஆர்,பாலு, பொன்முடி  என திமுக நிர்வாகிகளின் 17 பேரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1.34 லட்சம் கோடி என கடந்த வாரம் அண்ணாமலை பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார். 

2024 தேர்தலில் பாசிச சக்திகளை அடியோடு விரட்டி அடிப்போம்... உதயநிதி ஸ்டாலின் அதிரடி!!

TR Balu has sent a notice to Annamalai demanding Rs 100 crore compensation

100 கோடி இழப்பீடு

இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த உதயநிதி, ஆர்எஸ்.பாரதி உள்ளிட்டவர்கள் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு, நேற்று அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் தன் மீது அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காக அண்ணாமலை 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காக, அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  48 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அந்த நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு திமுக நிர்வாகிகள் ஒன்றன் பின் ஒன்றாக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி வருவது பாஜகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

பறிக்கப்பட்ட தொண்டனின் உரிமை! பதில் சொல்லாத நீதிமன்றங்கள்.. கோமாவில் குறட்டை விடும் வழக்கு! மருது அழகுராஜ்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios