மனிதநேய ஜனநாயக கட்சியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி நீக்கம்.! காரணம் என்ன தெரியுமா.?
கட்சி விரோத செயங்களில் ஈடுபட்டதாக மனிதநேய ஜனநாயக கட்சியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் புதிய பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
மனித நேய ஜனநாயக கட்சியில் மோதல்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தில் இருந்து அரசியல் பிரிவாக தொடங்கப்பட்டது மனித நேய மக்கள் கட்சி இந்த கட்சிக்கு 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தனக்கு போட்டியிட இடம் ஒதுக்காததால் மனித நேய ஜனநாயக கட்சியை தமிமுன் அன்சாரி தொடங்கினார். அப்போது அதிமுக பொதுச்செயலளார் ஜெயலலிதா தமிமுன் அன்சாரிக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கினார். அந்த இடத்தில் தமிமுன் அன்சாரி வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். இந்தநிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்தார்.
போட்டி போட்டு நீக்கம்
இந்தநிலையில் மனித நேய ஜனநாயக கட்சியின் பொருளாளர் ஷாரூனுக்கும், பொதுச்செயலாளர் தமிம்முன் அன்சாரிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து மாநில நிர்வாகி குழு கூட்டத்தில் பொருளாளர் ஹாரூனை கட்சியில் இருந்து நீக்குவதாக தமிம்முன் அன்சாரி அறிவித்தார். இந்தநிலையில் மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பொருளாளர் ஷாரூன் ரசீத், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அந்த கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளார். திண்டுக்கல்லில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 32 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியை 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிம்முன் அன்சாரி நீக்கம்
இதுதவிர, வட மாநிலத்தவரின் வருகையை கண்காணித்து முறைப்படுத்தத் கோரியும், பிபிசி நிறுவனத்தின் மீது வருமான வரித்துறை சோதனை நடத்த உத்தரவிட்ட மத்திய அரசைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த கட்சியின் புதிய பொதுச்செயலாளர் ஷாரூன் ரசீத் , பொதுக்குழுவின் முழு ஒப்புதலோடு 6 மாதங்களுக்கு தமிம் முன் அன்சாரி நீக்கப்படுவதாக தெரிவித்தார். தொடர்ந்து கட்சியிலும் மாவட்ட நிர்வாகிகள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாலும் கட்சி விதிகளுக்கு எதிராக தமிம் முன் அன்சாரி செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
கலைஞரின் பேனா இல்லையென்றால் அண்ணாமலை ஆடு மேய்த்து கொண்டிருந்திருப்பார் - ஆ.ராசா அதிரடி