கலைஞரின் பேனா இல்லையென்றால் அண்ணாமலை ஆடு மேய்த்து கொண்டிருந்திருப்பார் - ஆ.ராசா அதிரடி
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஈரோட்டிற்கான தேர்தல் மட்டுமல்ல. இந்தியாவின் தலை எழுத்தையே மாற்றக்கூடிய தேர்தல் என நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் தேர்தல்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா நேற்று கரட்டாங்காடு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது இந்த தேர்தல் ஈரோட்டுக்கான தேர்தல் மட்டும் இல்லை. தமிழ் நாட்டில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் மட்டும் இல்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றுவதற்கு அடிநாதமாக உள்ள தேர்தல் இந்த தேர்தல் என கருதுவதாக கூறினார். ஏன் இந்த தேர்தல் தேசத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என்றால் வேற்றுமையில் ஒற்றுமைக்கு மோடியால் ஆபத்து வந்துள்ளது. இதனை எதிர்க்க மு.க.ஸ்டாலினைத் தவிர எந்த முதலமைச்சருக்கும் தைரியம் இல்லை.
1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில வெற்றி
எதிர்த்தால் வருமான வரித்துறை ரைடு நடக்கிறது. டெல்லியில் ஜனநாயக ஆட்சியை கொண்டு வருவேன் என மு க ஸ்டாலின் இருக்கிறார். அந்த பயம் மோடிக்கு உள்ளது. அதனால்தான் மோடி டெல்லியில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் எத்தனை ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறப் போகிறது என பார்க்கிறார். 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றி பெற்றால்தான் மோடிக்கு செய்தி போகும். பேனா சிலைக்கு 80 கோடி ரூபாயா என கேட்கிறார்கள், அந்தப்பேனா எந்த பேனா என்றால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய, சைக்கிள் ரிக்சா கொடுத்த, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கிய சட்டத்தில் கையெழுத்திட்ட கலைஞரின் பேனாக்குத்தான் தற்போது சிலை வைக்கப்பட உள்ளது.
அண்ணாமலை ஆடு மேய்த்து கொண்டிருப்பார்
இந்த பேனா இல்லை என்றால் அண்ணாமலை ஆடு மாடு மேய்த்துக் கொண்டு இருப்பார். வானதி சீனிவாசன் வழக்கறிஞராக இல்லாமல் தென்னந்தோப்பில் மட்டை பொருக்கி கொண்டிருப்பார். எடப்பாடி பழனிச்சாமி பிஏ படித்து இருக்க மாட்டார். ஜெயலலிதா திரும்பி கூட பார்த்திருக்க மாட்டார்.இந்தப் பேனா இல்லை என்றால் இது எதுவுமே இல்லை. மேலும் தமிழ் மொழியை செம்மொழியாக்கிய பேனா அந்த பேனா. அந்தப் பேனாவிற்கு 80 கோடி வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கிறார். இதைச் சொல்ல எடப்பாடி பழனிச்சாமிக்கு யோகிதை இல்லை.
குற்றவாளிக்கு 79 கோடியில் நினைவிடம் ஏன்.?
ஜெயலலிதாவிற்கு 79 கோடியில் எதற்காக நினைவிடம் கட்டினீர்கள். ஜெயலலிதா ஊழல் குற்றவாளி என நீதிமன்றம் சொன்னது. உச்ச நீதிமன்றம் குற்றவாளி என தண்டனை கொடுத்த ஒரு குற்றவாளிக்கு 79 கோடி ரூபாய்க்கு கல்லறை கட்டினீர்கள். அதனை நாங்கள் தாங்கிக் கொண்டு உள்ளோம். பெருந்தன்மையாக விட்டோம். ஆனால் எத்தனையோ நலத்திட்டங்களை செய்த பேனாவிற்கு கேள்வி கேட்பது என்ன நியாயம் என கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்கள்
மதுரை டூ ஈஷா: 2 திமுக அமைச்சர்கள் மிஸ்ஸிங் - அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்ட பின்னணி இதுதானா.!